09.02.2014 அன்று யாழ் போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிப் பாடசாலையில் சமையல் போட்டி நடைபெற்றது. இதில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கான ஆரோக்கிய உணவை மேம்படுத்தும் முகமாக தேர்ந்து எடுக்கப்பட்ட 26 போட்டியாளர்கள் தாங்கள் புதிதாகக் கண்டுபிடித்த உணவை அறிமுகப்படுத்தினார்கள்.
பல் துறைசார் வல்லுனர்கள் 10 பேரும், 15 பாடசாலை மாணவர்களும் மத்தியஸ்தர்களாகப் பங்குபற்றினார்கள். சுவை, தரம், போசணைப் பெறுமானம், செலவு குறைந்த உணவு வகை, சமைக்கக் கூடிய நேரம், மூலப் பொருட்களுக்கான கிடைக்கும் தன்மை போன்றன கருத்தில் எடுக்கப்பட்டு போட்டி நடாத்தப்பட்டது.