சுற்றாடல் குளிர்ச்சி பெறவும், ஆரோக்கியமான ஜம்பு பழ பாவனையை அறிமுகப்படுத்தவும் யாழ் போதனா வைத்திய சாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையம் யாழ் குடாநாடு முழுவதும் 1ம் கட்ட நடவடிக்கையாக 5000 ஜம்பு மரக்கன்றுகளை நாட்டும் திட்டத்தை நிறைவு செய்திருக்கின்றது. இத் திட்டத்தின் மூலம் 16 பாடசாலைகள், 55 வைத்தியசாலைகள், முதியோர், சிறுவர் இல்லங்கள், உட்பட 13 சமூக அமைப்புகளுக்கும் பொது நூலகங்கள், நீதிமன்றம் மற்றும் வங்கிகள் உட்பட்ட பல்வேறு இடங்களில் ஜம்பு மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. இதற்க்காக நிதி நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் 10.08.2013 அன்று நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்ச்சி மூலம் நன்கொடைகள் மூலமும் திரட்டப்பட்டது.
எதிர்வரும் 18-12-2013 அன்று 2ம் கட்ட நடவடிக்கையாக மேலும் 2500 ஜம்பு மரக்கன்றுகள் யாழ் குடாநாடு முழுவதும் நாட்டப்பட இருக்கின்றன.
இம் மர நடுகைத் திட்டத்திற்கு International Medical Health Organization (IMHO) நிதியுதவி வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் ஒவ்வொருவரும் வீடு தோறும் ஜம்பு மரக்கன்றை நட்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்நிகழ்வு பொது மக்கள் தாமாகவே முன்வந்து தம் வீட்டிற்கு ஜம்பு மரக்கன்றை நாட்டும் ஆர்வத்தைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் எதிர்வரும் காலத்தில் ஜம்புப்பழ உற்பத்தி யாழ் குடாநாட்டில் அதிகரிக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.