பாடசாலை மாணவர்களிடையே சலரோகமும் சலரோகத்திற்கு முந்திய நிலையும் அதிகரித்து வருகின்றது. இந்நிலைமைக்கான காரணிகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
- ஒடி விளையாடுவதற்கான நேரங்கள் குறைக்கப்படட்டு தொடர்ச்சியான கல்விச் செயற்பாடுகள் (மாலை நேர கற்பித்தல்)
- குடிப்பதற்கு அதிகளவில் மென்பானங்களை பாவித்தல்
- ஆரோக்கியமற்ற உணவுகளை பெருமளவில் உள்ளெடுத்தல் (உதாரணம் மிக்சர், றோல்,சொக்கலேட், ஐஸ்கிறீம் வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் மதிய உணவுகளும் ஆரோக்கியமற்ற உணவாக காணப்படல்)
- தொலைக்காட்சி, கணினி போன்றவற்றில் அதிகளவு நேரத்தை செலவிடல்
- பெற்றோர்களிடையே பிள்ளைகளின் நிறை பேணுதல் பற்றி போதிய அறிவின்மை.
- உடல் பருத்துக் காணப்படுதல் ஆரோக்கியம் என்ற மூடநம்பிக்கைகள்.
இந்நிலையை தடுக்கு / குறைக்க பல மட்டடங்களில் பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள், சிற்றுண்டிச்சாலை நடத்துனர்கள் மருத்துவத்துறை சார்ந்தோர் என பல தரப்பட்டோரின் ஒன்று பட்ட முயற்சி இந்நிலையில் இருந்து மாணவர்களை விடுவிக்கும்.
இதற்கான சில வழிமுறைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
- ஓடி விளையாட நேரம் ஒதுக்கப்படல் வேண்டும்.
- சிற்றுண்டிச்சாலைகளில் ஆரோக்கியமற்ற உணவுகள் விற்கப்படுதலை தடுத்தல்.
- பெற்றோர்கள் கொடுத்துவிடும் உணவு ஆரோக்கிமானதாக இருத்தல் வேண்டும்.
- நிறை சம்பந்தமான அறிவு பெற்றோர்களிற்கும் மாணவர்களிற்கும் புகட்டப்படவேண்டும்
- அதிகரித்த உடல் நிறையுள்ள மாணவர்களை இனங்கண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் அவசியம்.