தேவையான பொருட்கள்
கொளபி | 100g |
பெரிய வெங்காயம் | 2 |
கறிவேப்பிலை | 1 கைப்பிடி |
கரட் | 1 |
பச்சை மிளகாய் | 4 |
கோவா | சிறிதளவு |
லீக்ஸ் | 1 |
எலும்பு நீக்கிய இறைச்சி | 2 மே. க |
உள்ளி | 2 பல்லு |
கறி முருங்கை இலை | 1 கைபிடி |
உள்ளி வெந்தயம், மிளகாய்த்தூள், ஏலக்காய்,கராம்பு,மிளகு தூள், உப்புத்தூள் |
தேவையான அளவு |
அவித்த முட்டை | 1 |
நீர் | தேவையான அளவு |
செய்முறை
கௌபியை நீர் விட்டு அவித்தல் ( அவிந்ததும் உப்பிடல்) பின் இறக்கி நீர் இல்லாது வடித்து வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டுதல். பின் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை, சிறு துண்டுகளாக்கிய கரட், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கோவா, நறுக்கிய லீக்ஸ், கோழி இறைச்சி, உள்ளி, சுத்தப்படுத்திய கறிமுருங்கை அனைத்தையும் அளவான நீரிலிட்டு உப்பிட்டு அவித்தல் ( நீர் வற்றும் வரை) சாதுவான நீர்ப்பதத்தில் மிளகுதூள், மிளகாய்ததூள், ஏலக்காய், கராம்பு என்பவற்றை போட்டு பிரட்டி இறக்கி வேறு ஒரு தட்டில் கொட்டி கௌபியையும் கொட்டி பிரட்டுதல் அதில் முட்டையையும் வைத்தால் மசாலா சேர்த்த சுவையான கௌபி தயார்.
செல்வி திபிஜா மகேந்திரன்