உரைப்படை
தேவையான பொருட்கள்
சோயா 200g
உழுத்தம் பருப்பு 200g
பயறு 200g
பெருஞ்சீரகம் தேவையானளவு
செத்தல் மிளாகய் 200 தேவையான அளவு
பெருங்காயம் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
சோயா, உழுத்தம் பருப்பு,பயறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து ஊறவைத்து பின்பு பெருஞ்சீரகம், பெருங்காயம், உப்பு செத்தல் மிளகாய் போன்றவற்றை தேவைக்கேற்ப சேர்த்து அரைத்தல் வேண்டும். அக்கலவையை ஒன்றாக்கி நன்கு கலத்தல் பின்னர் அக் கலவையை சிறிது நேரம் கழித்து தோசையாக சுடுதல்.
கூட்டுக்கறி
தேவையான பொருட்கள்
உடைத்த பயறு 200g
வாழைத்தண்டு தேவையானளவு
செத்தல் மிளகாய் தேவையானளவு
உப்பு தேவையானளவு
கறிவேப்பிலை தேவையானளவு
சின்னச்சீரகம் தேவையானளவு
வெங்காயம் தேவையானளவு
உள்ளி தேவையானளவு
செய்முறை
பயறை போதியளவு நீர் விட்டு அவித்து வாழைத்தண்டை சிறிது சிறிதாக வெட்டி அதனுடன் வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், செத்தல் மிளகாய் தூள் என்பவற்றையும் சேர்த்து அவித்தல் வேண்டும். அவித்தவுடன் உள்ளி, சீரகம் ஆகியவற்றை அரைத்து அதனுடன் சேர்த்து சிறிது நேரம் கழித்து கறியை இறக்கி பரிமாறலாம்.
செல்வி.தாரணி ஜானகிராமன்