அல்சைமர்ஸ் எனப்படும் ஞாபக மறதி நோயானது தற்போது உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் நியூயோர்க்கில் மவுண்ட் சினெய்யிலுள்ள மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆய்வொன்றில் கொக்கோ சாற்றின் மூலம் இந்நோயை தடுக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூன்று வகையான ( natural, ditched, lavado) கொன்கோ மாதிரிகள் எலிகளில் பரிசோதிக்கப்பட்ட போது lavado ( Minimally processessed cocoa extract) கொக்கோ சாறானது அல்சைமர்ஸ் நோயை தடுப்பதற்கான மிகச்சிறந்த பதார்த்தமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எலிகளின் மூளையில் AB oliqomers உருவாக்கத்தை குறைப்பதன் மூலம் நரம்புப்பிணைப்புகளில் ஏற்படும் பாதிப்பை குறைக்கின்றது.