யாழில் நீரிழிவு நோய்க்குள்ளாபவர்களதும் கட்டுப்பாட்டினை இழக்கின்ற நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் தற்போது அதிதீவிரமாக அதிகரித்து வரும் நிலைமை காணப்படுகின்றது.
இந்நிலைக்கான காரணிகளில் ஒன்றாக வெளிநாட்டு உறவினர்கள் கொண்டுவரும் “சொக்லேட்” என்றே வைத்திசயசாலைக்கு வரும் நீரிழிவு நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
மாதமொன்றிற்கு இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர் மூலம் கொண்டு வரப்படும் சொக்லேட் தொன்கணக்குகளில் காணப்படுகிறது.
உறவுகளின் மேலுள்ள அன்பு மேலீட்டால் வழங்கும் வெளிநாட்டு “சொக்லேட்டுகள்” தம் உறவுக்கு உடற்பருமன் அதிகரித்தல், நீரிழிவுக்குள்ளாகும் ஆபத்தை ஏற்படுத்தல் கட்டுப்பாடற்ற நீரிழிவை ஏற்படுத்துதல் பற்சூத்தை போன்ற ஆபத்தான நிலமைகளின் அத்திவாரம் என்பதனை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உறவின் மீதுள்ள அன்பை வெளிக்காட்டுவதற்கும் அவர்களின் உடல், உள நலனைப் பேணுவதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள், மருத்துவ உபகரணங்கள (குருதியமுக்கமானி, குளுக்சோ மீற்றர், செவிப்புலன் உணர்கருவசி) அல்லது பணமாகவோ அன்பளிப்புச் செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம்.
இலங்கை வாழ் உறவுகளும் வெளிநாட்டிலிருந்து “சொக்லேட்” வருவதை எதிர்பார்க்காமல் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்களையே நாடுங்கள்.
இனிப்பை வெறுப்போம் நீரிழிவை வெற்றி கொள்வோம்.