மகப்பேறு தாமதமடைதல் ( Subfertility) பகுதி 2
ஆண்களில் ஏற்படவல்ல மகப்பேறு தாமதமடைதல்
இந்த நிலைமை சராசரியாக 20 ஆண்களில் ஒருவருக்கு என்ற விகிதத்தில் காணப்படுகின்றது. ஆண்களில் விந்து உற்பத்தி ஆனது பூப்படைதலைத் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் தொடர்கின்ற ஒரு செயன்முறையாகும். விதைகளில் உற்பத்தியாகும் விந்து அப்பாற்செலுத்திகளூடாக விதைமேற்றிணிவை அடைந்து, விதைமேற்றிணிவில் சேமிக்கப்பட்டு சுக்கிலப் பாயத்தினூடாக வெளியேற்றப் படுகின்றது.
- விந்து உற்பத்தியில் ஏற்படும் பிரச்சினைகள்
- விதைப்பையினுள் விதை இறங்காமை, விதை முதிர்வில் ஏற்படும் பாதிப்புக்கள்
- கூகைக்கட்டு (Mumps), சின்னமுத்து ( Measles) காரணமாக விதையில் பாதிப்பு ஏற்படல் – பூப்பின் பின் Mumps epididymo orchitis ஏற்படின் விந்து உற்பத்தியில் நிரந்தரப் பாதிப்பு ஏற்படலாம்.
- போஷாக்குக் குறைபாடுகள்
- புகைத்தல், மதுபாவனை, போதைப் பொருள் பாவனை
- நீரிழிவு, தைரொய்ட் சுரப்பி குறைபாடுகள், கபச்சுரப்பிக் குறைபாடுகள்
- கதிர்வீச்சு
- சில வகை மருந்துகள் – வலிப்பு, மனஅழுத்தம் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப் படுகின்ற மருந்துகள் (cimetidine, sulphasalazine, Androgens (ஓமோன்கள்)
- பிறப்புரிமைக் குறைபாடுகள்
- விந்துகளுக்கெதிராக உடலில் உருவாக்கப்படும் பிறபொருளெதிரிகள்
- சூழல் மாசடைதல்
- விந்து கடத்தலில் ஏற்படும் பிரச்சினைகள்
- சில வகைத் தொற்றுகள் ( காசநோய், கொனோரியா – Gonorrhoea, யானைக்கால் விதைமேற்றிணிவு அழற்சி – Filarial epididimitis)
- இனப்பெருக்கத் தொகுதி சார்ந்த சத்திர சிகிச்சைகளும், அடிபடுதல் அல்லது காயமேற்படலும் (Trauma)
- பிறப்புக் குறைபாடுகள்.
- சுக்கிலப் பாயத்திலுள்ள குறைபாடுகள்
- விந்து எண்ணிககையும், தரமும் குறைவாக இருத்தல்
- சுக்கிலப் பாயத்தின் பாகுமை மாற்றங்கள்
- சுக்கிலப் பாயத்தின் Fructose அளவு குறைவடைதல்.
- உடலுறவின் முன் சுக்கிலப்பாயம் வெளியேறுதல்.
- சுக்கிலப்பாயம் சிறுநீரினுள் வெளியேறல்
பெண்களில் ஏற்படவல்ல மகப்பேறு தாமதமடைதல்:
- பரிவக்கீழ் – கபச்சுரப்பி – சூலக அச்சில் ஏற்படும் பிரச்சினைகள்
- இவ் அச்சு பாதிக்கப்படும் போது இவற்றினால் தொகுக்கப்படுகின்ற ஒமோன்களின்(GnRH, FSH, LH) செல்வாக்கினால் ஏற்படுத்தப்படும் உடலியற் தொழிற்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன. இவற்றின் விளைவினால் சூலிடலும் பாதிக்கப்படுகின்றது.
- சூலகத்தில் ஏற்படும் பிரச்சினைகளே பெண்களில் ஏற்படும் மகப்பேற்றின்மைக்கான பொதுவான காரணியாகும். அவர்களில் பலர் Poly Cystic Ovarian Syndrome (PCOS) இனால் பாதிப்புற்றிருப்பர்.
- கருப்பைக்குழாயில் ஏற்படும் பிரச்சினைகள்
- வயிற்றைக் குழியிலிருந்து சூல் கருப்பைக்குழாயினூடு கருப்பையை அடைய கருப்பைக் குழாயின் சீரான கட்டமைப்பும், தொழிற்பாடும் அவசியம்.
- கருப்பைக்குழாயின் பகுதியான அல்லது முழுமையான அடைப்பு – இவை முன்னைய தொற்றுக்களால் / இடுப்புக்குழியில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகளால் / முன்னைய கருச்சிதைவுகளால் ஏற்பட்டிருக்கலாம்.
- கருப்பையிலுள்ள பிரச்சினைகள்
- பிறப்பிலே ஏற்படும் கட்டமைப்புப் பிரச்சினைகள்
- கருப்பைக் கட்டிகள்
- தொற்றுக்கள்
- கருப்பைக் கழுத்திலுள்ள பிரச்சினைகள்
- கட்டமைப்பு பிரச்சினைகள்
- விந்தை வாங்குந்தன்மையுள்ள சீதச்சுரப்பு இன்மை
- விந்துகளுக்கு எதிரான பிறபொருளெதிரிகள் காணப்படல்.
- பிறப்பு வழியிலுள்ள பிரச்சினைகள்
- கட்டமைப்பு பிரச்சினைகள்
- இடுப்புக்குழியிலுள்ள பிரச்சினைகள்
- Endometriosis – இதுவும் பெண்களில் ஏற்படவல்ல மகப்பேற்றின்மைக்கான பொதுவான காரணியாகும். இங்கு கருப்பை அகலவணிக்கலங்கள் கருப்பை அல்லாத இடங்களில் இருப்பதுடன் மாதவிடாய் காலத்தில் குருதிக் கசிவையும் ஏற்படுத்தும்.
Dr. Thevaranjana Puvanendiran
Diabetic Centre
Teaching Hospital
Jaffna
Posted in கட்டுரைகள்