22 சலரோகமும் மன அழுத்தமும்.
சலரோகமும் மன அழுத்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளன. மன அழுத்தத்தை முற்றாக அகற்ற முடியா விட்டாலும் அதை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். ஒழுங்கான உடற்பயிற்சி சத்துள்ள உணவு, ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, தியானம், தளர்வாகும் செயன்முறைகள் என்பன மன அழுத்தத்தைக் குறைக்கக உதவும்.
மனத்தைத் தளர்வுபடுத்தும் எளிய முறைகள்.
- எதிர்பார்ப்புகளின் உண்மைத் தன்மையைக் கொண்டிருங்கள்.
- ஆழ மூச்செடுங்கள்
- நண்பர்கள், வைத்தியர்கள் உளவளத் துணையாளர்களிடம் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.
- உடற்பயிற்சி
- எதிர்மறையான எண்ணங்களை விலக்குங்கள்
- உங்கள் முறைப்பாடுகளையும் பிரச்சினைகளையும் எழுதுங்கள்.
- மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்.
- வேடிக்கை விநோதங்களுக்கு நேரம் ஒதுக்கி உங்களை இலகுவாக்கிக் கொள்ளுங்கள். சங்கீதத்தை இரசித்தல், கடற்கரையில் நடத்தல், தோட்டத்தில் வேலைசெய்தல், படங்கள் பறவைகளைப் பார்த்தல், நீச்சலடித்தல் என்பன.
வகை 1 இற்குரிய சலரோகம் எவருடைய தவறினாலும் விளைந்த நோயல்ல. உடற்கலங்களுக்கு எதிராக உடலில் நடைபெறும் செய்முறையால் இது ஏற்படுத்தப்படுகின்றது. இதை நிறுத்தத் தற்போது மருந்துகள் எதுவும் இல்லை. குணப்படுத்த முடியாவிட்டாலும் மேற்கூறிய சிகிச்சை முறைகளைக் கையாண்டு சுகதேகியாகப் பிள்ளை வாழமுடியும். வைத்தியசாலை ஊழியர்கள் உங்களின் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள உதவுவார்கள். குடும்ப உறுப்பினருடைய உதவியும் உங்கள் பிள்ளையின் நல்வாழ்வுக்கு அவசியமாகும்.