3. சமூகசேவைகளும் பொருளாதார உதவிகளும்….
உங்கள் பிரதேசத்தின் பிரதேச சபை செயலர், சமூகசேவை உத்தியோகத்தர் ஆகியோர் பின்வருவனவற்றில் உதவி செய்வார்கள்.
- மருத்துவ உதவி
சமூகசேவைகள் திணைக்களத்தில் இருந்து
தேவைப்படுகின்ற ஆவணங்கள்
- நிதியுதவிக்கான விண்ணப்பக் கடிதம்
- மருந்துக் கொள்வனவுக்கான மருந்துச் சிட்டை
- ஓசுசலவிலிருந்து அல்லது 3 தனியார் மருந்துச் சாலைகளிலிருந்து பெற்ற மருந்துக்கான திட்டம்
- வைத்தியசாலைக்குப் பிரயாணிக்க ஒருமாதத்திற்கான செலவு.
- வழங்கக்கூடிய மிகக் கூடிய தொகை ரூபா 10,000 இலிருந்து ரூபா 20,000 வரை.
சிறுவர் நல பாதுகாப்பு திணைக்களத்தில் இருந்து
- ஒருவைத்திய நிபுணரின் சான்றிதலும் நிலைமை பற்றிய பரிந்துரையும்.
- ஆகக் கூடிய தொகையாக ரூபா 5000 குழந்தைகளின் உரிமையை மேம்படுத்தும் உத்தியோகத்தரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைய வழங்கப்படும்.
- மாதாந்தப் பொது உதவிகள்.
- கொடுப்பனவுகள் மாகாணச் சமூகசேவைத் திணைக்களத்தால் வழங்கப்படும்.
- மாதாந்தம் ரூபா 100 இலிருந்து 500 வரை கொடுக்கப்படும்.
- உளநலத் துணைவழங்குதல்
பிரதேச செயலகத்திலுள்ள தகுதி பெற்ற உளவள அலுவலர் அல்லது வைத்தியசாலையிலுள்ள உளநல விருத்தி உதவியாளரிடம் தனிநபருக்கான அல்லது குடும்பத்துக்கான ஆலோசனையைப் பெறமுடியும்.
4. பிள்ளையின் உரிமைகளையும் பாதுகாப்பபையும் உறுதிசெய்தல், கேலிசெய்யப்படுதல் அல்லது பாகுபாடு செய்யப்படுதல் தொடர்பாக பின்வரும் அமைப்புகள் பொறுப்பேற்கின்றன.
– பிள்ளைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு
– பெண்கள் பிள்ளைகளுக்கான விசாரணைகள் – பொலிஸ் நிலையம்
– பிள்ளைகளின் உரிமைகளை மேப்படுத்தும் அலுவலர் – பிரதேச செயலகம்.
5. சலரோகமுள்ள பிள்ளைக்கும் குடும்பத்தவர்களுக்குமாக சமூக உளநல உதவிகள்
பன்முகப் படுத்தப்பட்ட சேவையாளர்களைக் கொண்ட குழு தகுந்த தருணத்தில் உதவுவதால் நற்தரமுள்ள வாழ்வை முன்னெடுக்க உதவும்.