16. உங்கள் பிள்ளையின் பாதங்களைப் பராமரித்தல்
நீண்டகாலத்தில் சலரோகம் காரணமாகப் பிள்ளையின் பாதங்கள் பாதிக்கப்படலாம். சில முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றினால் இதைத் தவிர்க்கலாம் அல்லது விளைவுகளைக் குறைக்கலாம். பின்வரும் இலகு வழிகளை உங்கள் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுங்கள். காலப் போக்கில் இவை நல்ல பழக்கங்களுக்கு இட்டுச் செல்லும்.
பிள்ளையின் பாதங்களைப் பாதுகாக்க முக்கிய செயற்பாடுகள்
- எப்போதும் செருப்பு அல்லது சப்பாத்தை அணியவும்.
- கால்களைக் கழுவினால் பூரணமாக உலர்த்தவும்.
- விரலிடுக்குகளைத் தவிர்த்து மற்றைய இடங்களில் கிறீம் ஒன்றைத் தடவவும்.
- பெருவிரல் நகங்களை வெட்டாதீர்கள்.
- தோலில் மாற்றம் ஏற்படுகின்றதா எனத் தினமொரு முறை அவதானியுங்கள்.
17 . வளரும்போது அல்லது பூப்படையும் போது உங்கள் பிள்ளைக்குப் பிரச்சினைகள் உண்டா?
சலரோகம் மிக நன்கு கட்டுப்பாட்டில் இருக்குமெனின் பிள்ளை சாதாரணமாக வளர்ச்சியும் விருத்தியும் அடையும். உரிய நேரத்தில் பூப்படைவதும் அதன் பின்னான உடற்செயற்பாடுகளும் சாதாரண விதத்தில் தொடரும்.
18. உங்கள் பிரச்சினைகளைக் கலந்துரையாடுவதற்கு வைத்தியரைத் தவிர வேறு யாராவது உள்ளார்களா?
சீமாட்டி றிட்ஜ்வே வைத்தியசாலையில் சலரோகத்தையும் சிகிச்சை முறைகளையும் பற்றிக் கற்பிக்கின்ற தாதியர் உள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலை நீாிழிவு சிகிச்சை நிலையம் உட்பட மற்ற வைத்தியசாலைகளிலும் இவ்வாய்ப்பு கிடைக்கின்றது.