எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல் நிலைகளைத் தடுக்க குருதியில் வெல்ல மட்டத்தைச் சீராகப் பேண வேண்டும்.
எதிர்பார்க்ப்படும் இரத்த வெல்ல மட்ட அளவு (ADA வழிகாட்டு நூல் 2011)
வயது |
சாப்பாட்டின் முன் |
இரவு நேரம் |
HBA1c |
||
Mg/dl |
Mmol/l |
Mg/dl |
Mmol/l |
||
< 6 வரு |
100-180 |
5.6-10.0 |
110-200 |
6.1-11.1 |
<8.5 |
< 6-12 வரு |
90-180 |
5.0-10.0 |
100-180 |
5.6-10.0 |
≤ 8.0 |
< 13-19 வரு |
90-130 |
5.0-7.2 |
90-150 |
5.0-8.3 |
≤ 7.5 |
Standards of Medical Care in Diabetes. Diabetes Care 2011;34:S11-S61 |
நோய் கட்டுப்பாட்டினை எப்படிச் சோதிப்பீர்கள்.
உங்களிடம் குளுக்கோமீற்றர் இருந்தால் வீட்டில் இரத்த வெல்லத்தைச் சோதிக்க முடியும். கருவியைப் பாவிக்கும் முறை வைத்தியசாலை விடுதியில் உங்களுக்குக் கற்பிக்கப்படும்.
எப்போது இரத்த வெல்லத்திக் அளவைச் சோதிப்பீர்கள்.
- உங்கள் பிள்ளையில் புதிதாக சலரோகம் அடையாளங்காணப்பட்டிருந்தால் வைத்தியசாலையிலிருந்து வீடு வந்தபின் சில நாட்களுக்கு அதிகாலை 3 மணிக்கு இரத்தத்தைச் சோதியுங்கள் ( ஆகக்குறைந்த அளவு வெல்லமட்டத்தைக் கண்டறியலாம்)
- பிள்ளையின் இரத்தத்தில் வெல்லம் குறைந்த நிலை ஏற்பட்டால்.
- பாடசாலையில் விளையாட்டில் ஈடுபட்டால் அன்றிரவு சோதியுங்கள். இன்சுலின் அளவையும் இரவுச் சிற்றுணவையும் வெல்ல அளவிற்கேற்பச் சீர் செய்யுங்கள்.
- ஒவ்வொரு முறை கிளினிக் வரமுன்பு 3 – 4 நாட்களுக்கு முன்பதாக வெல்ல அளவைச் சோதியுங்கள். இது ஒரு தொடர்ச் சோதிப்பாக இருக்க வேண்டும். அதாவது 3 பிரதான உணவுக்கு முன்னரும் உணவுண்டு 2 மணித்திலாங்களின் பின்னரும் சோதிக்கவும். இந்த வாசிப்புகள் உங்கள் வைத்தியர் இன்சுலினைச் சீரான அளவில் தீர்மானிக்க உதவும்.
- எப்போதாவது உங்கள் பிள்ளை உடல் நிலை பற்றிய கவலை அல்லது பதற்றம் ஏற்படும் போது சோதியுங்கள். (உதாரணம் நோயுற்ற வேளையில்)
தாழ்த்தும் வெல்லத்திற்கான (குளுக்கோசு) சிறுநீர்ப் பரிசோதனை
- பெனடிக்ற் சோதனை மூலம் சிறுநீரிலுள்ள வெல்லத்தைக் கண்டறியலாம். இதை விடுதியில் உங்களுக்கு கற்பிக்கப்படும்.
- சரியான முறைப்படி தினமும் 3 பிரதான உணவின் முன்னதாகச் செய்து பதிந்து வைக்க வேண்டும்.
- தொடர்ச்சியாக சிறு நீரின் நிறம் நீலமாக இருந்தால் இரத்தத்திலுள்ள வெல்லத்தைச் சோதியுங்கள். தொடர்ச்சியாக மஞ்சள் / செம்மஞ்சள் / சிவப்பாக இருந்தால் பிள்ளையை வைத்தியரிடம் எடுத்துச் செல்லுங்கள்.
- இது இரத்த வெல்லத்தின் கட்டுப்பாட்டினை அறிய மிகச் சிறந்த முறையல்ல. ஆனால் இலகுவானது. மலிவானது. பிள்ளைக்கு வலியற்ற முறையில் செய்யக் கூடியது.
கழிந்த மூன்றுமாதங்களுக்கான இரத்த வெல்லக் கட்டுப்பாட்டை Hba1c இரத்தப் பரிசோதனை மூலம் அறியலாம். வயதிற்கேற்ற எதிர்பார்க்கப்படும் பெறுமானம் மேலுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.