கடந்த ஆண்டு 177 சிறார்கள் தொழுநோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த சிறார்களில் பெரும்பாலானோர் வடக்கு மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளார்கள்.
1000 இற்கு மேற்பட்ட புதிய நோயாளர்கள் ஆண்டுதோறும் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் ஒன்றென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கின்றது.
இலங்கையில் தொழுநோயாளர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை பல தரப்பிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுக்கு 2000 புதிய நோயாளிகள் என்ற அளவில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது.
குறிப்பாக 2013 ஆண்டில் மேல்மாகாணத்திலேயே 44 வீதம் தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் சிறப்பாக கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான நோயாளிகள் காணப்படுகின்றனர். அடுத்தபடியாக 14 வீதமான நோயாளர்கள் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.