தேவையான பொருட்கள்
உழுத்தம் பருப்பு – ½ சுண்டு
கடலைப்பருப்பு – ½ சுண்டு
வெள்ளை போஞ்சி – 10
பச்சை போஞ்சி – 10
கரட் – பாதி
கத்தரிக்காய் – பாதி
வெங்காயம், பூடு – 5
சிறிதளவு உப்பு
தயிர்( புளித்தது)
செய்முறை
உழுந்து, கடலைப்பருப்பபை ஊறவைத்து, உழுத்தம் பருப்பை நன்றாக அரைத்துப் பின் கடலைப் பருப்பை் போட்டு அரைத்து, உப்பையும் சேர்த்து, வெட்டிய போஞ்சி வகையையும், வெங்காயம், பூடு, தயிர், கத்தரிக்காய், கரட் என்பவற்றை அரைத்த கடலைப்பருப்புடன் சேர்த்து அரைமணி நேரம் புளிக்க வைத்துப் பின்னர் பரிமாறலாம்.
இவ் இட்டலியை துவரம்பருப்புத் துவையலுடன் சாப்பிட்டால் மிக மிகச் சுவையாக இருக்கும்.