அண்மைக்காலமாக A9 வீதியிலும் யாழ்குடா நாட்டிலும் வாகன விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்கள் பெருமளவு அதிரித்துக் காணப்படுகின்றது. இது பல இறப்புக்களுக்கும், நிரந்தர உடற்பாதிப்புக்களுக்கும் காரணமாக அமைகின்றது. தினந்தோறும் வாகன விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் காரணமாக வைத்தியசாலைகளில் விடுதிகளிலும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் பெரும் இட நெருக்கடி காணப்பட்டு வருகின்றது.
இலகுவில் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய இவ் வாகன விபத்துக்கள் காரணமாக பல குடும்பங்கள் நிர்க்கதி நிலைக்கு ஆளாகி வருவதுடன், பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் உள்ளாகின்றனர்.
வாகன விபத்துக்களுக்கு முக்கியமான காரணங்களாக –
- நீண்ட தூர வாகன சாரதிகளுக்கு போதிய ஓய்வின்மை
- குடிபோதையிலும், நித்திரைத் தூக்கத்திலும் வாகனம் ஓட்டுதல்
- அதிகரித்த வேகம்
- போதிய சாரத்தியப் பயிற்சியின்மை
- வீதி ஒழுங்குகள் பற்றிய அறிவு போதாமை
போன்றவை அமைகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்த பரந்துபட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவையாக உள்ளது.