கரப்பான் பூச்சியைத் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். ஆனால் இந்த கரப்பான் பூச்சியானது மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றாதா என்பது சிலருக்கே தெரிகின்றது.
கரப்பான் பூச்சியானது தனது மலக்கழிவு உமிழ் நீரினூடாக உணவு, நீர் என்பவற்றினை மாசடையச் செய்கின்றது. இக்கழிவுகளால் வயிற்றோட்டம், உணவினை பழுதடையைச் செய்கின்ற பக்றீரியாக்கள் செறிந்து காணப்படுகின்றன. கரப்பான் பூச்சியின் மலக்கழிவு, உடற்பாகம் காற்றிலே பரம்பலடைகின்றது. இக்காற்றினை சுவாசிப்பதினால் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஏற்படுகின்றது. இதனால் சிறுவர்கள் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.
உணவு, நீர், என்பவற்றை தகுந்த சுகாதார முறைப்படி கையாள்வது மிகவும் முக்கியமானது. மேலும் உணவுப்பொருட்களை இறுக்கமாக மூடிவைத்தல், வீட்டிலுள்ள கழிவுப்பொருட்களை (முக்கியமாக சமையலறைக் கழிவுகள்) உடனுக்குடன் அகற்றுதல், மற்றும் களஞ்சிய அறை, குளிர்சாதனப்பெட்டி, பாவனையற்ற வீட்டுப்பாகங்களை அடிக்கடி தூய்மைப்படுத்தல் மூலம் கரப்பான் பூச்சிகளின் தாக்கத்தை தடுத்துக் கொள்ளலாம்.