You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for September, 2023
மனிதன் இன்றி மரங்கள் இருக்கும் மரங்கள் இன்றி மனிதன் இல்லை. மரங்களைப் பாருங்கள். நமக்காகவே தம்மை அர்ப்பணித்துப் பிறருக்கு முழுவதும் பயன்படும் வாழ்க்கை உடையனவனாக விளங்குகின்றன. மரங்கள் சுற்றுப்புறச் சூழலில் நல்ல தட்ப வெப்பநிலையைப் பேணுவதுடன் காற்றில் உள்ள கரியமில வாயுவை உள்இழுத்து காற்று நஞ்சாகாமல் தடுத்துவிடுகின்றன. நன்றாக வளர்ந்த மரம் ஒன்று (வேம்பு, புங்கை) பத்து குளிர்சாதனங்களால் ஏற்படும் வெப்பத் தணிப்பைக் காட்டிலும் கூடியவெப்பத்தைத் தணித்துவிடும். வேளாண்மைத் தொழில் உருவாகுவதற்கு முன்பே மனித இனத்தை மரங்களே […]
எல்லாப் பழங்களிலும் மனிதனுக்குத் தேவையான கனியுப்புக்கள், விற்றமின்கள், தாதுப்பொருள்கள், நார்ப்பொருள்கள், மாப்பொருள்கள் சில அளவு வித்தியாசத்துடன் காணப்படுகின்றன. குடல் சுத்தமாக இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை. இதனை வாழைப்பழம் செய்கின்றது. அத்துடன் குடற்புண்களையும் மாற்றவல்லது. தினமும் ஒரு பழமாவது குறைந்தது சாப்பிடுவதன்மூலம் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். இதனால் கொழுப்புச்சத்துக் கிடையாது. இருதய நோயாளிகள் சாப்பிடலாம். மாதுளம்பழம் சாதாரண குளிர்சாதனப் பெட்டியில் ஆறுமாதம் வரை பழுதடையாமல் வைத்திருக்கலாம். விற்றமின் C அதிக அளவில் உள்ள பழம் நெல்லிக்கனி (பெருநெல்லி) அதற்கு அடுத்த […]
நீங்கள் தினமும் எத்தனை சந்தர்ப்பங்களில் உங்கள் கைகளைக் கழுவுகின்றீர்கள்? இதோசில பயன்தரும் குறிப்புக்கள். கைகழுவுவதால் தடிமன், இன்புளுவென்சா, ஈரழற்சி A, கிருமிகளால் உண்டாகும் வயிற்றோட்டம், புறொன்கியோலைற்றிஸ் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கலாம். கைகழுவ வேண்டிய சில சந்தர்ப்பங்கள் : உணவைத் தயாரிக்க முன்பு: இறைச்சி, கோழி போன்றவற்றைச் சுத்தம் செய்தபின்பு, சாப்பிட முன்பும் பின்பும் கழிப்பறையைப்பாவித்த பின்பு, சுகாதாரத் துவாய்களை மாற்றிய பின்பு காயங்களுக்கு மருந்திட முன்பும் பின்பும் நோயாளிகளைக் கவனிக்க முன்பும் பின்பும். வைத்தியசாலைக்குச் சென்று வந்த […]
உயிர் வாழ்வதற்கு நீர் மிகவும் இன்றியமையாததாகும். இவ்வாறு இன்றியமையாததாக உள்ள நீர்மூலம் பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. நீரானது நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிருகங்களினதும், மனிதனதும் மலங்களிற் காணப்படுகின்ற நோயைத் தோற்றுவிக்கின்ற கிருமிகளால் மாசடைகிறது. இந்த அசுத்தமான நீரை அருந்தும்போது அதிலுள்ள நோய் கிருமிகள் மனிதனது இரைப்பை, குடல் என்பவற்றிற்குள் சென்று பெருகிப் பல நோய்களைத் தோற்றுவிக் கின்றன. வயிற்றுளைவு, நெருப்புக்காய்ச்சல், கொலரா, மஞ்சள் காமாலை, இளம்பிள்ளைவாதம் போன்றவை பொதுவாக நீர்மூலம் பரவும் நோய்களாகும். மழைக்காலத்திலும், கோடைப்பருவத்திலும் நீர் […]