You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for August, 2023
முட்டை ஒரு மலிவான, பாதுகாப்பான இயற்கையான அதிகூடிய ஊட்டச்சத்துள்ள உணவாகும். தகரங்களிலே அடைத்து விற்பனையாகும் சத்துமாக்களுடன் ஒப்பிடும்பொழுது இதிலிருக்கும் ஊட்டச்சத்து வீதம் எவ்வளவோ அதிகமாக இருப்பதுடன் எந்தவிதமான இரசாயனக் கலப்புமற்ற இயற்கையான உணவாக இது விளங்குகின்றது. குருதி அமுக்கம், இருதயநோய், நீரிழிவுநோய், கொலஸ்ரோல் அதிகரிப்பு போன்ற நோய்கள் உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று முட்டைகள்வரை உண்பது மிகவும் சிறந்ததாகும். முட்டை ஒரு ஆபத்தான உணவு என்ற சிந்தனை மாற்றம் பெறவேண்டும். சுகதேகியாக இருப்பவர்களும், சிறுவர்களும் அதிகவு முட்டைகளை உணவிலே […]
மேலைத்தேச நாடுகளிலே கல்சியக் குறைபாடு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. அதன் காரணமாகப் பல நோய்களும் ஏற்படுகின்றன. இதனால் அந்த நாடுகளிலே கல்சியக் குளிகைகள் பெருமளவில் பாவிக்கப்பட்டு வருகின்றன. மேலைத்தேசங்களிலே வசிக்கும் எமது உறவினர்கள் நல்ல நோக்கத்துடன் இந்தக் கல்சியம் கொண்ட சத்துக் குளிகைகள் நிரம்பிய போத்தல்களை இங்கு இருக்கும் தமது உறவினர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்தக் குளிகைகளை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் எமது மக்களும் பெருமளவில் பாவித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்திலே எமது குடி தண்ணீரில் பெருமளவு […]
யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் தற்கொலை பலரது மனதிலும் ஏதோ இனம் தெரியாத பயணத்தையும், இயலாத் தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. பெறுமதிமிக்க உயிரின் தாற்பரியம் பூச்சி கொல்லிகளால் கரைந்து கொண்டு அலரிக் கொட்டைகளில் அழிந்து கொண்டும் இருக்கிறது. இத்தனை காலமும் தமிழ் மக்களின் உயிரிழப்புக்கள் பல வரலாறுகளை ஏற்படுத்தியிருக்க இப்படியாக அவலச் சாவுகள் மக்கள் மனதில் வெறுமையை ஏற்படுத்தியுள்ளன. ஏன் இத்தனை தற்கொலைகள்?யாரில் என்ன தவறுள்ளது? நம்மில் ஒரு தடவையேனும் தற்கொலை எண்ணம் தோன்றி மறையாதவர்கள் எத்தனை பேர்? விரல் […]
பின்வரும் மூன்று பகுதிகளில் ஏற்படும் பாதிப்புக்களுடன் கூடியதாகக் காணப்படுகின்றது. ஒருவருடைய வாழ்நாளில் அவரைப் பல ஆயிரம் கிலோமீற்றர் வரை காவிச் செல்வது அவரது பாதங்களாகும். இவ்வாறு பாதங்கள் எமது உடலைக் காவிச் செல்லும் போது காலில் பல்வேறு சேதங்கள் (உரசல் காயங்கள், கிழிவுகள், வெடிப்புக்கள்) ஏற்படுகின்றன. ஒரு வாகனத்தினுடைய அதிர்வு உறிஞ்சிகள் போல் செயற்படுவதும் எமது பாதங்களே. இவ்வாறு மகத்தான சேவை புரிகின்ற எமது பாதங்களுக்கு ஒழுங்கான கவனிப்பும் பராமரிப்பும் இன்றியமையாதவை. ஒரு வாகனத்தைப் பல மைல்களுக்குச் […]
தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மருந்துகளைப் பாவிப்பது கடினமான விடயம் என்றால் பிழையாகாது. அது எவ்வளவு கடினமானதோ அவ்வளவு முக்கியமானதும் கூட, சலரோகம், உயர்குருதி அமுக்கம், வலிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நீண்ட காலம் மருந்து பாவிக்க வேண்டி இருக்கின்றது. ஆனால், கணிசமான எண்ணிக்கையான நோயாளிகள் மருந்துகளை ஒழுங்காகப் பாவிப்பதில் கவனக் குறைவாக இருக்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்களான, மருந்துகளை ஒழுங்மகாகப் பாவிக்காமல் விடுவதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பாரதூரமானவையாகும். உதாரணமாக: சலரோகத்துக்குப் பாவிக்க வேண்டிய மருந்து […]