You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for July, 2023
கால்களைக் கழுவுதல் தினந்தோறும் பாதங்களைக் காரத்தன்மை குறைந்த சவர்க்காரத்தைப் பயன்படுத்தி நன்றாக கழுவவும். பின்னர் மென்மையான துவாயினால் துடைக்கவும். துடைக்கும் போது விசேடமாகப் பெருவிரல் பகுதி, விரல் இடைவெளிகளில் கவனம் செலுத்தவும். பாதங்களை உலர்வான நிலையில் பேணவும். ஆயினும் அதிகம் உலர்வான நிலை காணப்படுமாயின் வெடிப்புக்கள் ஏற்பட்டு பற்றீரியாக்கள் பரவலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதிக உலர்த்தலைத் தடுக்க Lanolin or Vaseline பாவிக்கவும். களிம்புகள் படுக்கை விரிப்பில் படுவதை தடுப்பதற்காகப் பழைய காலுறையை அணிந்து கொள்ளவும். இயல்பாகவே […]
எமது உடலில் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களைத் தவிர மற்றைய அனைத்து இடங்களிலும் முடி காணப்படுகின்றது. எமது உடலின் வெளித்தோலில் மயிர்புடைப்புக் கலங்கள் காணப்படுகின்றன. இக் கலங்கள் மூலம் புதிய கலங்கள் உருவாக்கப்படும் போது பழைய கலங்கள் முடிகளாக வெளித்தள்ளப்படும். கெரற்றின் கொண்ட முடிகளாக உடலிற் காணப்படும். எமது தலையில் 100000 – 150000 வரையான முடிகள் உண்டு. இவற்றில் 100 வரையான முடிகள் நாளாந்தம் இறந்து விடுகின்றன. நாளாந்தம் வளர்ச்சியடையும் முடிகள் 1 வருடத்தில் 15Cm வரை […]
நீரிழிவு நோயாளிகள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். அக்கட்டுப்பாடு இழக்கப்படுமிடத்து பாதிப்புகள் அதிகம் ஏற்படும். குருதிக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள் ஒரு வாகனம் சரியாக இயங்குவதற்கு அதற்குரிய எரிபொருள் விநியோகம் சரியான முறையில் இருக்க வேண்டும். அதே போன்று எமது கால்களும் சரியாக இயங்க அதற்குரிய குருதி விநியோகம் சிறப்பாக அமைதல் வேண்டும். நீரிழிவு நோயாளிகளின் நாள் பட்ட நிலைமையில் அவர்களது நாடிகளில் கொழுப்பு படிவங்கள் ஏற்படும். அந்த நாட்களில் உட்பகுதி தடிப்படைந்து குருதி விநியோகம் குறைவடையும் […]
இன்றைய நவீன, நாகரிக உலகில் வாழும் நாம் உடற்பயிற்சியின் தேவையை அத்தியாவசியமாக உணர வேண்டிய காலம் வந்துள்ளது. இன்று நம்மில் பெரும்பாலானோர் ஒரு கதிரையில் இருந்து கொண்டே பல வேலைகளை, பல சாதனைகளை, கணனிகள், இலத்திரனியல், மின் இயந்திர சாதனங்கள் மூலம் இலகுவாக முடிக்கின்றனர். இதனால் வேகமாக உழைப்பிற்காக சுழன்று கொண்டிருக்கிறோம். இந்த முன்னேற்றம் வேறொரு வழியில் மனிதனின் உடல் தொழிலியலைப் பாதித்துக் கொண்டிருப்பதை எம்மால் உணர முடிவதில்லை. தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்து பல மணி […]