You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for June, 2023
கொலஸ்ரோல் என்பது ஒரு வேதிக்கூட்டுப் பொருள். இது இயற்கையாக எமது உடலில் உருவாக்கப்படுகிறது. எமது உடலுக்குத் தேவையான கொலஸ்ரோலில் 80 வீதமானதை எமது கல்லீரல் உற்பத்தி செய்து விடுகிறது. மீதம் நாம் உண்ணும் உணவில் இருந்து எடுக்கப்படுகிறது. கொலஸ்ரோல் நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதது. ஆயினும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகரிக்கும் போது தீங்கை ஏற்படுத்துகின்றது. நமது உடலில் கடத்தும் சாதனமாகத் தொழிற்படும் குருதியின் கொழுப்பானது புரதங்களுடன் இணைந்த நிலையில் பின்வருமாறு காணப்படுகிறது. இந்தக் கொழுப்புச் சத்துக்கள் […]
இன்று உலக அரங்கில் வருடாந்தம் 60 லட்சம் மக்களின் உயிரைக் கொள்ளை கொண்டு பல கோடிக்கணக்கான மக்களை நோயாளிகள் ஆக்குகின்ற புகையிலையின் பிறப்பிடம் அமெரிக்கா. 15ஆம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் குளிர், பனி போன்ற விசேட காலங்களில் பாவித்து வந்தனர். இதனை புதிய உலகைக் கண்டு பிடிக்கப் புறப்பட்ட கொலம்பஸ்சும் மாலுமிகளும் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் அவதானித்ததாக வரலாறு கூறுகின்றது. பின்பு அங்கிருந்து ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பரவி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய […]
இயற்கை எமக்கு வழங்கியுள்ள மிகச் சிறந்த மருத்துவக் குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள மா மருந்து தண்ணீர் ஆகும். இது எளிமையானது. முறை அறிந்து பயன்படுத்தினால் தவறாமல் பயன் தரும். பக்க விளைவுகள் இல்லாதவை. உடல் அனுசேபம் இயல்பாக நடைபெற போதுமான நீர் இன்றியமையாதது ஆகும். சிறுநீர், மலம் எமது உடலின் மிகப் பெரிய கழிவுகள் நீக்கியான தோலின் மூலம் வியர்வை, மூச்சு, சளி ஆகியவற்றின் வழியாக ஒவ்வொரு விநாடியும் நமது உயிராற்றல் நமது உடலை நோயாற்றதாக செய்வதற்காக […]
இன்சுலின் என்றால் என்ன? எமது உடல் உறுப்பாகிய சதையியினால் சுரக்கப்படும் ஓர் ஓமோன ஆகும். இது உடலின் குளுக்கோசின் செறிவைப் பேணுவதற்கு முக்கிய பங்காற்றுகின்றது. இந்த இன்சுலின் ஓமோனானது ஒருவரில் சுரக்கப்படுவது குறைவாகவோ அல்லது சுரக்கப்படும் தொழிற்பாட்டில் தடை ஏற்படும் போதோ அவரில் குருதி குளுக்கோசின் செறிவு சீராக இருக்காது. இந் நிலையைத் தான் நீரிழிவு நோய் என அடையாளப்படுத்துகிறோம். இந்த நிலையில் ஒரு நீரிழிவு நோயாளிக்கு இன்சுலின் தொழிற்பாட்டை கூட்டுவதற்கு மாத்திரைகளும், இன்சுலின் ஊசி மருந்தும் […]