You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May, 2023
சூழல் மாசடைதல் என்றால் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் சூழலில் உட்புகுவதால் அதன் சமநிலையில் ஏற்படும் குழப்பம் அல்லது ஒரு பாதிப்பு ஆகும் எமது சூழலை நீர், நிலம், வளி என வகைப்படுத்த முடியும். எனவே சூழல் மாசடைதல் என்பதை நீர் மாசடைதல், நிலம் மாசடைதல், வளி மாசடைதல் என்ற வகையில் நோக்கலாம். வளியானது இரசாயனக் கழிவுகள் காற்றில் கலத்தல் மூலம் மாசடைகிறது. அவையாவன: Co2, So2, CFS அத்துடன் நைதரசன் ஒட்சைட்டுக்கள் (Nitrogen Oxides). இவை தொழிற்சாலைகள், […]
விலங்கு விசர் நோய் நோய்த் தொற்றுக்குள்ளான விலங்கினது உமிழ் நீரில் வைரஸ் கிருமிகள் செறிந்து காணப்படும். நோய்த்தொற்றுக்குள்ளான விலங்கு கடிக்கும் போது அல்லது மென்சவ்வுள்ள பிரதேசத்தில் நக்கும் போது அல்லது வேறு வழிகளில் உமிழ்நீர் நேரடியாகத் தொடுகையுறும் போது தொற்றை ஏற்படுத்துகின்றது. நாயில் காணப்படும் நோய் அறிகுறிகள் மனிதனிற் காணப்படும் நோய் அறிகுறிகள் விலங்கொன்றினால் கடியுண்டால் செய்ய வேண்டிய முதலுதவி விலங்கு விசர் நோய்க் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகள் வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பு மருந்தேற்றல் நாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாடு […]
மிகவும் சாதாரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய பிரச்சினை இந்த உயர் உடற்பருமன். நீங்களும் அதிற் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உடற் பருமன் உடையவரெனின். சில தசாப்தங்களின் பின்னர் உயர் உடற்பருமன் உடைய சமூகத்தைத்தான் சாதாரண சமூகமாகக் கருதப்படவேண்டிய நிலையும் ஏற்படலாம். அவ்வாறான நிலையைத் தடுக்க நீங்கள் தயாராகுங்கள். உயர் உடற்பருமன் இது உடலில் மேலதிக கொழுப்புச் சேமிப்பால் ஏற்படும் ஆரோக்கியமற்ற நிறையதிகரித்த நிலையாகும். உயர் உடற்பருமனை அடையாளப்படுத்துதல் இதற்காக BMI என்ற கணிப்பீடு வழக்கத்திலிருக்கிறது. BMI 30 […]
அழுத்தம் (Stress) என்பது: நீங்கள் வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ அதனை அனுபவித்திருப்பீர்கள். (Stress) என்பது, நீங்கள் ஒரு சவாலான மாற்றத்துக்கு வெளிக்காட்டப்படும் போது உடலில் இயற்கையாகவே நிகழும். உங்களை உயர்நிலையில் தயார்படுத்துவதற்கான நிலைமையே ஆகும். அந்த மாற்றம் நெருக்கமான ஒருவரின் மரணச்செய்தியாகவோ அல்லது உங்களை ஓர் எதிரி தாக்கவரும் சூழலாகவே இருக்க முடியும். Stress அவசியமான ஒன்று:பின் அது ஏன் பாதிப்பானதாக மாறுகின்றது? ஏதாவதொரு (Stress) அழுத்தத்தை ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கையில் நீங்கள் Stress இற்கு […]
ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் நீராக மலம் செல்வதையே வயிற்றோட்டம் என்கிறோம். வயிற்றோட்டம் ஏற்படும் போது ஒருவரின் உடலிலிருந்து நீர், உப்புக்கள், சீனிச்சத்து ஆகியன அகற்றப்படுகின்றன. இவ்வாறு அகற்றப்படுதலானது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகின்றது. இந்த ஆபத்தை தடுக்க வெளியேறிய நீர், உப்புக்கள், சீனிச்சத்து ஆகியன மறுபடியும் உடலுக்குள் சேர்க்கப்பட வேண்டும். நோய்க் கிருமிகள் உடலினுள் செல்வது வயிற்றோட்டம் வருவதற்கு ஒரு முக்கிய காரணியாகும். கிருமிகள் உடலுக்குள் செல்லும் முறைகள் வயிற்றோட்டத்தை தவிர்க்கும் முறைகள் வயிற்றோட்டத்திற்கான சிகிச்சை […]