You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March, 2023
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். மருத்துவ உலகில் நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும். நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, நுண்மையான நரம்புக்கட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பதும் நகங்களே. நாம் நுட்பமான பொருட்களைக் கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள உரோமத்தினைப் போலவே கெராட்டீன் என்ற புரதச்சத்தைக் கொண்ட […]
வைத்தியசாலையில் பல்வேறு வகையான நோயுடைய நோயாளிகள் இருப்பதனால் பல தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் தங்களைத் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தொற்று நோய்களிலிருந்து நாம் பாதுகாப்புப் பெறுவது எப்படி? எஸ்.ரகுராமன், பி.கலாவேந்தா, வி.செந்தூரன்மருத்துவ மாணவர்கள் (28 ஆவது பிரிவு)
நோயாளர்கள் மருந்து வகைகளைப் பாவிக்கும் போது பல்வேறு தவறுகளை விடுகின்றனர். அது மட்டுமன்றி வைத்திய சிகிச்சையை இடைநடுவே தமது சுயவிருப்பின் பெயரில் நிறுத்திக்கொள்ளலும், குறிப்பிட்ட நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உபயோகிக்காமையும் இவற்றில் சுட்டிக்காட்டப்பட வேண்டியவையாகும். இது தொடர்பாக விழிப்புணர்வூட்டும் முகமாகவே இந்த ஆக்கம் தரப்படுகின்றது. எஸ்.வித்தியஷாகரன், எஸ்.தனிஷன்,28ஆவது பிரிவு மருத்துவ மாணவர்கள்
மனித வாழ்க்கை அமைதியாகவும், சந்தோஷம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டுமாயின் நோயற்ற வாழ்க்கை அவசியமாகும். வாழ்வதற்கு பல்வேறு காரணிகள் முக்கியமானவையாகக் காணப்படினும், ஆரோக்கியமான நிறைவான உணவும், சுத்தமான நீரும் நோயின்றி நீண்டகாலம் உயிர்வாழ இன்றியமையாதவை எனலாம். எவ்வளவு தான் உணவுப்பழக்கவழக்கங்களில் அக்கறை கொண்டிருந்தாலும் நியம முறைப்படி நிறை உணவுக் கூறுகளைத் தேர்ந்தெடுத்தாலும் கிருமி நாசினித் தாக்கமற்ற காய்கறிகளைத் தற்காலத்தில் பெறமுடிவதில்லை. அதிகரித்து வரும் பீடைநாசினிப் பாவனையால் தாக்கம் விளைவிக்காத காய்கறி, இலைக்கறி வகைகளைப் பெறல் அரிதே எனலாம். அதிகரித்துவரும் […]
‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ உடலில் உள்ள மூலப்பொருள்களில் எப்பொருள் மிகுந்தாலும் அல்லது எப்பொருள் குறைந்தாலும் உடலுக்கு ஊறு ஏற்படும் என்பதனை வள்ளுரவர் அழகாகக் கூறியுள்ளார். எனவே, உடலுக்குத் தேவையான சத்தான சரிவிகிதமான உணவுகளை எந்த அளவுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமோ அந்த அளவுக்கு வேளாவேளைக்குச் சரியான இடைவெளியில் சாப்பிடுதல் முக்கியம். உங்களை உயிர்ப்புடையவராக வைத்திருப்பதற்கும், உங்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதற்கும், உங்களுக்கும் இவ்வுலகுக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதற்கும் உணவு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பாரம்பரிய […]