You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for January 27th, 2020

உடலில் ஊனத்தை ஏற்படுத்தி,இன்னொருவரில் சார்ந்து வாழும் நிலையை ஏற்படுத்தும் நோய்களில் தொழுநோயும் ஒன்றாகும். இது பரம்பரை நோயல்ல. இது ஒரு தொற்று நோயாகும். நோயாளி தும்மும் போதும் இருமும் போதும் சிந்தும் சிறுதுளிகளினால் ஒருவரிடமிருந்து மற்றையவருக்கு பரம்புகின்றது. இதன் நோயரும்பு காலம் 3-5 வருடங்கள் வரைநீண்டு காணப்படலாம். இது எல்லா வயதினரையும் ஆண், பெண் இரு பாலினரையும் தாக்கக் கூடியது. பெரும்பாலும் பொருளாதார வளம் குன்றிய குடும்பத்தினரே இலகுவில் பாதிப்புறுகின்றனர். தோல் மற்றும் நரம்புகளையே இந்த நோய் […]