You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for January, 2020
உடலில் ஊனத்தை ஏற்படுத்தி,இன்னொருவரில் சார்ந்து வாழும் நிலையை ஏற்படுத்தும் நோய்களில் தொழுநோயும் ஒன்றாகும். இது பரம்பரை நோயல்ல. இது ஒரு தொற்று நோயாகும். நோயாளி தும்மும் போதும் இருமும் போதும் சிந்தும் சிறுதுளிகளினால் ஒருவரிடமிருந்து மற்றையவருக்கு பரம்புகின்றது. இதன் நோயரும்பு காலம் 3-5 வருடங்கள் வரைநீண்டு காணப்படலாம். இது எல்லா வயதினரையும் ஆண், பெண் இரு பாலினரையும் தாக்கக் கூடியது. பெரும்பாலும் பொருளாதார வளம் குன்றிய குடும்பத்தினரே இலகுவில் பாதிப்புறுகின்றனர். தோல் மற்றும் நரம்புகளையே இந்த நோய் […]
நீங்கள் மருத்துவரைச் சந்திக்கும் பொழுது சில விடயங்களைத் தெரிந்து வைத்திருப்பீர்களாக இருந்தால் அது உங்களுக்கு மிகவும் பயனுடையதாக இருப்பதுடன் அநாவசிய தாமதம், அலைச்சல், செலவு என்பவற்றைக் குறைத்துக் கொள்ளவும் உறுதுணையாக இருக்கும். உங்கள் மருத்துவம் சம்பந்தமான குறிப்புகள் துண்டுகள், புத்தகங்கள், சோதனை முடிவுகள் அனைத்தயும் ஒரு பைல் கவரில் அல்லது பை ஒன்றில் போட்டு பாதுகாப்பாக வைத்திருங்கள். வைத்தியரைச் சந்திக்கும் பொழுது அவை அனைத்தயும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அவை உங்களுக்குப் பொருத்தமான மருத்துவப் பராமரிப்பை தீர்மானிப்பதற்கு […]
பிறக்கும் போதே குழந்தைகளில் காணப்படும் உடல் கட்டமைப்பு அல்லது தொழிற்பாட்டுக் குறைபாடுகளை பிறவிக் குறைபாடுகள் என்பர். பிறக்கும் குழந்தைகளில் 33 பேரில் ஒருவர் பிறவிக் குறைபாடு உடையவராக பிறக்கின்றது இதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் 3.2 மில்லியன் குழந்தைகள் ஏதோவொரு அங்கவீன குறைபாடு உடையவர்களாக இவ்வுலகில் பிறக்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு வருடமும் பிறவிக்குறைபாட்டு நோய்களால், பிறந்து முதல் 28 நாட்களுள் ஏறத்தாழ 270, 000 பச்சிளங்குழந்தைகள் இறக்கின்றனர். யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருட இறுதி […]
கல்வியறிவு மருத்துவம் மற்றும் ஏனைய வசதிகள் அதிகரித்துக் காணப்படும் இன்றைய காலத்திலும் பல்வேறு சிக்கல்களின் காரணமாக புதிதாய் பிறந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை தகுந்த கவனிப்பின் மூலம் தவிர்க்கப்படக் கூடியவை. அதற்காகப் பெற்றோரும் உறவினர்களும் கவனிக்க வேண்டிய அம்சங்களாவன இயலுமானவரை தாயும் சேயும் சேர்ந்திருத்தல் வேண்டும்.தாய் குழந்தையை அரவணைப்பதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறலாம். தாய்ப்பாலூட்டல் இலகுவாக்கப்படுகின்றது. தாய்க்கு பால் சுரப்பு அதிகரிப்பதுடன் குழந்தையும் பசியேடுக்கையில் தாய்ப்பாலை பருகமுடிகின்றது. தாய்க்கும் குழந்தைய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு […]