You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for December 27th, 2019

நண்பரொருவருக்குக்காய்ச்சல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சரி, ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று மழை தூறிக்கொண்டிருந்த பொழுதொன்றில் புறப்பட்டேன். மருத்துவமனைவாசலில் குவிந்திருந்த சனக்கூட்டத்துள் நுழைந்து, நோயாளர் விடுதிக்குள் போவதற்கிடையில் போதும் போதுமென்றாகிவிட் டது. நல்லூர்த் தேருக்குக்கூட இப்படிக்கூட்டம் இருக்குமா என்பது சந்தேகமே. அப்படியொரு கூட்டம். வெளியேதான் அப்படி என்றால், விடுதிக்குள் கட்டில்கள் நிரம்பி வழிந்து, நிலமெங்கும் பாய்களை விரித்து, கால் வைக்கக்கூட இடைவெளியின்றி எங்கும் ஒரே நோயாளர் மயம். பார்க்கப்போன நண்பரைக்கூட சரிவர சுகம் விசாரிக்கமுடியவில்லை . “எல்லாம் டெங்குக்காரர். […]