You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for December, 2019
அநேகமான நீரிழிவு நோயாளிகளை நோக்கின் அவர்கள் தமது பிற்காலத்தில் இருதய நோயாளிகளாக இருப்பதை நாம் அவதானித்துள்ளோம். நீரிழிவு நோயாளிகள் தமது குருதியின் குளுக்கோசின் அளவைக் கட்டுப்பாடாக வைத்திருப்பவர்களாயினும்கூட அவர்களுக்கு இருதய நோய்களுக்கான சந்தர்ப்பம் சாதாரண ஒருவரிலும் பார்க்க இரண்டு தொடக்கம் நான்கு மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயானது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது அவையாவன, குறைந்த வயதிலேயே இருதய நோய்கள் ஏற்படுதல். அதிகரித்த குருதி அழுத்தம் நரம்புகள் பாதிக்கப்படுதல். கண்கள் பாதிக்கப்படுதல். பாரிசவாதம் […]
நண்பரொருவருக்குக்காய்ச்சல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சரி, ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம் என்று மழை தூறிக்கொண்டிருந்த பொழுதொன்றில் புறப்பட்டேன். மருத்துவமனைவாசலில் குவிந்திருந்த சனக்கூட்டத்துள் நுழைந்து, நோயாளர் விடுதிக்குள் போவதற்கிடையில் போதும் போதுமென்றாகிவிட் டது. நல்லூர்த் தேருக்குக்கூட இப்படிக்கூட்டம் இருக்குமா என்பது சந்தேகமே. அப்படியொரு கூட்டம். வெளியேதான் அப்படி என்றால், விடுதிக்குள் கட்டில்கள் நிரம்பி வழிந்து, நிலமெங்கும் பாய்களை விரித்து, கால் வைக்கக்கூட இடைவெளியின்றி எங்கும் ஒரே நோயாளர் மயம். பார்க்கப்போன நண்பரைக்கூட சரிவர சுகம் விசாரிக்கமுடியவில்லை . “எல்லாம் டெங்குக்காரர். […]
டெங்கு காய்ச்சலானது நுளம்பால் பரப்பப்படும் ஒரு தொற்று நோய் ஆகும். இந்த வைரஸ் தொற்றானது மனிதனுக்கு மனிதன், நேரத்துக்கு நேரம் மாறுபட்ட அறிகுறிகளை அதாவது சாதாரண காய்ச்சல் தொடக் கம் உயிர் கொல்லும் டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சி நிலை போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்.இது அனைவரையும் பாரபட்சமின்றி பாதித்தாலும் சிறுவர்கள், முதியோர் மற்றும் நீண்ட கால நோய்களுக்குட்பட்டவர்கள் (நீரிழிவு, புற்றுநோய்) போன்றோரை வெகுவாகப் பாதிக்கின்றது. நோய்க்காவி நுளம்புஎடிஸ்வகை பெண்நுளம்பு, இவை கறுப்பு நிறக்காலில் வெள்ளை சிறு […]
எய்ட்ஸ் தொற்றுக்கிலக்கானவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வரும் அதேவேளை ஏனையவர்கள் தொற்றுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பு பெறு தலை ஊக்கப்படுத்தும் முகமாகவும் ஐக்கிய நாடுகள் சபையானது ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதம் முதலாம் திக தியை பன்னாட்டு எய்ட்ஸ் நோய் தினமாக அறிவித்துள்ளது. ஒவ்வொருவருடமும் வெவ்வேறு நோக் கங்களைக் கொண்ட மகுட வாசகங்கள் ஐ.நா சபையால் அறிவிக்கப்படும். அந்த வகையில் 30ஆவது உலக எய்ட்ஸ் தினம் இன்று கடைப்பிடிக்கப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு எய்ட்ஸ் தினம் […]