You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for October, 2019
ரேபிஸ் என்பது எம்மவர் மத்தியில் விசர் நாய்க்கடி வியாதியென அறியப்பட்ட ஒரு நோய். தெரு நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ்வைரஸ் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்ரெம்பர் 28ஆம் திகதி உலக ரேபிஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த லூயிஸ்பாஸ்டர் இறந்த தினமான செப்ரெம்பர் 28ஆம்திகதி உலகளாவிய நீர்வெறுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு என்ற தன் னார்வ அமைப்பு, ரேபிஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு வந்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்து “உலக […]
இருதய மீள் இயக்கம் எனும் போது இதய மாற்று அறுவை சிகிச்சை உங்கள் எண்ணங்களின் தோன்றுவது கண்கூடு. ஆனால் இந்த இருதய மீள் இயக்கம் என்பது உங்கள் அண்மையில் உள்ளவர் ஒருவருக்கு எதிர்பாராத நேரத்தில் (அதாவது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முதல்) இதயத்துடிப்பு நிறுத்தப்படுமானால் அவர் இறப்பு நிலைக்கு செல்வதற்கு முதல் அவருக்கு அளிக்கும் சிகிச்சை முறையாகும். இது பெரும்பாலான நோயாளர்களுக்கு வைத்தியசாலையில் சி.பி.ஆர் என்ற சொற்பதத்தால் வழங்கப்படும் ஒரு அவசர சிகிச்சையாகும். இந்த நிலைக்கு அதாவது […]
இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை நாடுமுழுவதும் 22,562 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில்சேர்க்கப்பட்டுள்ளார்கள்.இதில் சுமார் 1385 பேர் யாழ்.மாவட்டத்தில் மட்டும்பாதிக்கப்பட்டுள்ளார்கள். திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவில் 14 பேர் உயிரிழந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. டெங்குக் காய்ச்சல் வருடம் முழுவதும் ஏற்பட்டாலும் நவம்பர் தொடக்கம் பெப்ரவரி வரையான மாரி காலத்தில்தான் வட பகுதியில் அதிகமாக ஏற்படுகின்றது. மாரி காலத்தில் அதிக நீர்தேங்கும் இடங்களால் ஏற்படும் நுளம்புப் பெருக்கம் இதற்குக்காரணமாகும். டெங்குக்காய்ச்சல் எவ்வாறு பரவுகின்றது? ஈடீஸ் (Aedes) எனப்படும் […]
மனித வாழ்வுச்சக்கரமானது பல்வேறு தேவைகளையும் அவற்றை அடைவதனையும் மையமாகக்கொண்டு உருண்டோடுகின்றது. இந்த வாழ்வின் நகர்வுக்கு உடல் ஆரோக்கியமும் வாழ்வின் முழுமைக்கு சமூகத்துடனான தொடர்பும் அவசியமாகக் காணப்படுகின்றது. உடல் ஆரோக்கியத்தை வழங்குவதற்கு சிறந்த சுகாதாரம் பங்களிப்புச் செய்வதனைப் போன்று சமூக ஊடாட்டத்தை ஏற்படுத்துவதில் கல்விக்கு அளப்பெரிய பங்கு உண்டு. கல்வி மூலமாக வரும் அறிவு வளர்ச்சி சமூக விருத்தியை ஏற்படுத்துகின்றது. அந்த வகையில் கல்வியானது மனித விருத்தி கட்டத்தில் பல்வேறு மட்டத்தில் வழங்கப்பட்டு வருவது என்பது நாம் அறிந்ததே. […]