You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for September 2nd, 2019

உங்கள் வீட்டுச் சமையலறையே நோய் தீர்க்கும் மிகச் சிறந்த முதல் மருத்துவமனையாகும். நாம் உண்ணும் உணவின் ஊட்டமே உயிர்காக்கும் மருந்தாகும். இதில் உப்பும் நாம் உண்ணும் உணவில் ஒன்றி விட்ட உணர்வுபூர்வமான விடயம் ஆகும். எனினும் எந்தவொரு பொருளுக்கும் இரு வேறுபட்ட குணங்கள் உள்ளன. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும். எமது உடலில் உப்பின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ எமக்கு பிணிகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. உப்பு மிகுதியினால் எமது உடலில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுநீரகம் […]

நீரிழிவு நோய் கண், மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிக்கும். இந்த நோய் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட பார்வைக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். கண்ணில் முக்கியமாக பின்புறமுள்ள விழித்திரையின் குருதி நாளங்களைப் பாதிக்கும். விழித்திரையில் ஏற்படும் மாறுதல்களை கண்மருத்துவர்களால் மட்டுமே பரிசோதித்து கண்டறியமுடியும். மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகங்களிலும் இதே மாறுதல்கள் ஏற்படுவதால் இந்தப் பரிசோதனை மூலம் இவற்றின் தன்மைகளையும் அறிய முடியும். நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோயின் தீவிரம் மற்றும் […]