You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for September, 2019
மழைகாலம் தொடங்கி விட்டது. நோய்நொடிகளும் இலகுவில் குழந்தைகளை அணுகத் தொடங்கிவிடும். நாம் கவனமாக இருப்பதன் மூலம் அவற்றிலிருந்து குழந்தைகளாக் காப்பாற்றலாம். மழைகாலங்களில் ஏற்படக்கூடிய பொதுவான நோய்கள் பின்ருவன தடிமனும், சளிக்காய்ச்சலும். தொண்டைமுனை அழற்ச்சி வயிற்றுளைவும் வயிற்றோட்டமும் சாதாரண வைரசு காய்ச்சல் டெங்கு காய்ச்சல் தோற்றுபுண்கள் நீர்சிரங்கு முட்டு வருத்தம் ( அஸ்துமா) விஷ ஜந்துக்களின் கடி மழைகாலங்களில் காணப்படும் வெப்பநிலை மாற்றங்களும், அதிக ஈரப்பதனும் ஈரலிப்பான சூழலும் சுவாசத் தொகுதியை பாதிக்கக்கூடிய வைரசுக்களினதும், பக்றீறியாக்களும் வளர்ச்சிக்கு ஏதுவாகின்றது. […]
மனித வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது. ஆதிகாலம் தொட்டு மனிதர்கள் தேடி அலைவது மகிழ்ச்சியான வாழ்க்கையைத்தான். மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் என்னென்ன இருக்கவேண்டும் என்று எம்மிடம் ஒரு நீண்டபட்டியலே இருக்கின்றது. மகிழ்ச்சி என்றால் என்ன என்பது பற்றி பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். பேராசிரியர் லோட் ரிச்சாட் லேயாட் மகிழ்ச்சி என்பதைப் பற்றி கூறும் போது “மகிழ்ச்சி என்பது உங்கள் எதிர்பார்ப்பையும் உங்களுக்கு கிடைப்பதையும் சமன் செய்வதாகும். ஒன்று நீங்கள் விரும்புவது எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது […]
நீரிழிவு உள்ளவர்கள் உண்ணக்கூடிய ஆரோக்கியமான உணவுவகைகள் உண்மையிலே அனைவருக்குமே பொருத்தமான தெரிவாக அமைந்துள்ளன. இந்த உணவு வகைகள் சுவை நிறைந்தனவாக சமையல் செய்து உண்பது மனதுக்கும் உடலுக்கும் புத்தூக்கத்தை கொடுத்து மனிதனின் ஆரோக்கியத்தை வளர்க்க உறுதுணையாக அமையும். சுவையாக எவற்றை உண்ண முடியும்? முட்டை, பால், கோழி இறைச்சி, மீன், இறால், தயிர், மோர் போன்றவை அதிக புரதத்தையும் விற்றமின்கள் மற்றும் கனியுப்புக்களையும் கொண்டவை. இவற்றை உங்களுக்கு பிடித்த சுவையானவடிவத்தில் தயார்செய்து உண்ணமுடியும். சமையலின் பொழுது வாசனைத் […]
எமது சமுதாயத்தில் இன்றைய கால கட்டத்தில் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றோர் அதிகளவாகக் காணப்படுகின்றனர். இவ்வாறான நிலைக்கு அதிகரித்த வேலைப்பளு, ஆடம்பர வாழ்க்கை முறை, நாகரிக மாற்றம், நேரமுகாமைத்துவமின்மை , அதிகரித்த தேவைகள் உட்பட்ட பல்வேறு காரணிகளைக் கூறிக்கொண்டே போகமுடியும். இன்றைய காலப்பகுதியில் அதிகரித்த மன அழுத்தம், அந்த மன அழுத்தத்தைச் சரியாகக் கையாளுகின்ற திறமைக் குறைவு இவற்றினால் பல்வேறு நோய்கள் மற்றும் சமூக, உளப்பிரச்சினைகள் என்பன ஏற்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பாதிப்பை எதிர் […]
உங்கள் வீட்டுச் சமையலறையே நோய் தீர்க்கும் மிகச் சிறந்த முதல் மருத்துவமனையாகும். நாம் உண்ணும் உணவின் ஊட்டமே உயிர்காக்கும் மருந்தாகும். இதில் உப்பும் நாம் உண்ணும் உணவில் ஒன்றி விட்ட உணர்வுபூர்வமான விடயம் ஆகும். எனினும் எந்தவொரு பொருளுக்கும் இரு வேறுபட்ட குணங்கள் உள்ளன. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும். எமது உடலில் உப்பின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ எமக்கு பிணிகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. உப்பு மிகுதியினால் எமது உடலில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுநீரகம் […]
நீரிழிவு நோய் கண், மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிக்கும். இந்த நோய் உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட பார்வைக்கோளாறு ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். கண்ணில் முக்கியமாக பின்புறமுள்ள விழித்திரையின் குருதி நாளங்களைப் பாதிக்கும். விழித்திரையில் ஏற்படும் மாறுதல்களை கண்மருத்துவர்களால் மட்டுமே பரிசோதித்து கண்டறியமுடியும். மூளை, இருதயம் மற்றும் சிறுநீரகங்களிலும் இதே மாறுதல்கள் ஏற்படுவதால் இந்தப் பரிசோதனை மூலம் இவற்றின் தன்மைகளையும் அறிய முடியும். நீரிழிவு நோயால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு நோயின் தீவிரம் மற்றும் […]