You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for June, 2019
குருதிச் சோகை என்றால் என்ன? அதற்கான காரணங்கள் எவை? அது குணமாக கூடிய நோயா? இவ்வாறான பல்வேறுபட்ட கேள்விகள் எம்முன்னர் பரந்து விரிந்து நிற்கின்றன. குருதிச்சோகை என்றால் குருதியில் காணப்படும் செங்குழியங்களில் அல்லது குருதி நிறப் பொருள் ஹீமோகுளோபினில் (Hb) ஏற்படும் குறைபாட்டு நிலையாகும். இந்த நோய் அறிகுறிகளாக, உடல் களைப்பு, சோர்வுலு அதிக வேலை செய்ய முடியாது இருத்தல், நெஞ்சுப் படபடப்பு, நெஞ்சுவலி, உடல் வெளிறுதல் ( கண் மடல் மற்றும் நாக்கு) என்பவற்றை குறிப்பிடலாம். […]
பல்வேறு தரப்புகளும் இப்பொழுது கதைக்கும் ஒரு விடயமாக குடும்ப வன்முறை விளங்குகிறது. எங்களிடையே குடும்ப வன்முறை அதிகரித்துவிட்டதா அல்லது இப்போதுதான் நாம் விழிப்படைந்து இருக்கிறோமா? இதன் ஆதிமூலம் எப்போதும் முட்டையா அல்லது கோழியா போல விடை தெரியாத கதை நிகழ்வு-1 65 வயது மதிக்கதக்க பாட்டியும்பேர்த்தியும் வைத்தியசாலைக்கு சேர்க்கபட்டார்கள். பாட்டியின் முகம் முழுக்கக் கண்டல் காயம். பேர்த்தியோ பலநாள் சாப்பிடாமல் இருந்தது போல் வாடிய சிறுபயிராக இருந்தாள். தாயில்லா பிள்ளையும் பாட்டியும் சிறுபிள்ளையின் தந்தையால் தினமும் துன்பத்துக்கு […]
31 சர்வதேசபுகைத்தலுக்கு மே எதிரானநாள். இது புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து சிந்திக்கும் நாள். மக்களைக் குறிப்பாக இளைஞர்களை சிந்திக்க வைக்கும் நாள். மக்களை விழிப்புறச் செய்யும் நாள். இளைஞர்கள் புதிதாக இப்பழக்கத்தை பழகிக் கொள்வதைத் தடுக்கும் நாள். புகைப் போரை அப்பழக்கத்தினின்றும் மீட்கும் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்யும் நாள் புகைத்தலுக்கு எதிராக மக்களை சுயாதீனமாக எழுச்சியுறச் செய்து அவர்களையும் இதில் பங்களிக்கச் செய்யும் நாள். எனவே இந் நாளின் முக்கியத்துவம் உணர்ந்து அதனுள் பொதிந்துள்ள […]