You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April, 2019
இலங்கையில் தொற்றா நோயானது பெரிய பொதுச்சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளது. தொற்றாநோயானது இறப்புகளுக்கான முக்கிய காரணியாக உள்ளது. பெரும் பாலானவர்கள் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களையும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் தொற்றாநோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நோய் அதிகரிப்பும் செலவீனங்களும் இந்த நோய்கள் துரிதமாக அதிகரித்து வருவதனால் சுகாதார வரவு-செலவுத் திட்டத்தின் பெருமளவு நிதியினை ஒதுக்க வேண்டியுள்ளது. தொற்றா நோய்களை ஆரம்பத்தில் கண்டறிதல் தொற்றாநோய்களுக்கான சிகிச்சை மற்றும் தொற்றா நோய்களின் சிக்கல் நிலமைகளை பராமரித்தல் போன்ற செலவினங்கள் அதிகமாக உள்ளன. […]
நிரிழிவானது நீடித்து நிலைக்கும் ஒரு நாள்பட்ட நோயாக இருப்பதனால், அந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் நோயை ஏற்றுக் கொண்டு அதற்கான முறைமைகளிலும் பல பரிகாரங்களைத் தேடுவதோடு, தமது வாழ்க்கையில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு வாழ வேண்டியிருக்கின்றது. நீரிழிவு உடையவர்கள் தமது குருதியிலுள்ள குளுக்கோசின் அளவைக்கவனமாகப் பேணுவது மட்டுமல்லாமல், வழமையான தமது உணவுப் பழக்கத்திலும், உடல் தொடர்பான பழக்கவழக்கங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி இருக்கும். ஒருவகையில் இதனை வாழ்வின் ஒரு பண்பாட்டு மாற்றம் எனவும் அழைக்கலாம். வாழ்வை குலைக்கும் […]
சூரிய ஒளியின் நன்மைகளைச் சொல்லில் வடிக்க முடியாது. சூரிய ஒளி இன்றேல் மனித வாழ்வே இல்லை. பூமியின் அனைத்து சக்திகளும் இயங்குவதற்கு மூல காரணமே சூரிய ஒளிதான். இயற்கையான சூரிய ஒளி இலவசமாக எல்லா உயிரினத்துக்கும் கிடைக் கின்றது. எனினும் தற்போதைய நகரமயமான வாழ்க்கைமுறைகள், காடுகள் மற்றும் மரங் கள் அழிப்பு, அடுக்குமாடிகள், நெருக்கமான வாழ்க்கைமுறைகள், சுற்றுசூழலின்வெப்ப அதிகரிப்பு, புவி வெப்பமயமாதல், சூரிய ஒளியின் நேரடித் தாக்கம் போன்ற பலவழிகளில் மனித குலம்வெப்பம் சம்பந்தமான நோய்களையும் பாதிப்புக்களையும் […]
குழந்தைப் பருவம் ஆபத்தை அறியாத ஆழமறியாது காலை விட்டு மாட்டிக்கொள்ளும் பருவமாகும் பெற்றோரும் வீட்டிலுள்ளோரும் கவனம் இல்லாது இருந்தால் குழந்தைகள் விபத்துக்களில் சிக்கிக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது. குழந்தைகள் இறப்பு வீதம் ஒவ்வொருவருடமும் எம் நாட்டில் 600 சிறுவர்கள் இறக்கிறார்கள். அதே போல, கிட்டத்தட்ட 27,0000 சிறுவர்கள் வைத்திய சாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள். காயங்கள் காரணமாக அதிகமாகக் காப்பாற்றப்படும் சிறுவர்கள் அங்க வீனங்களுடன் வாழ்கின்றார்கள். விபத்துக்களைத் தவிர்த்துவளரும் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அவைபற்றிய அடிப்படை அறிவு அவசியமாகும். குழந்தைகள் […]
நீடிவு நோய் உலகையே அச்சுறுத்தும் வகையில் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்து நிற்பது யாவரும் அறிந்ததே. உலகளாவிய அளவில் ஏறத் தாழ 400 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்கள். இன்னும் 15 ஆண்டு கள் செல்ல இத் தொகை 600 மில்லியன்களைத் தாண்டும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. இந்த நிலையில் நீரிழிவு நோயை வராமல் தடுக்கலாமா? இது நடைமுறைச் சாத்தியமா? அல்லது வெறும் கனவு தானா? இதனை எவ்வாறு நடைமுறைப் படுத்தலாம்? போன்ற வினாக்கள் எம்முன்னே எழுந்து […]