You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for January, 2019
மருத்து உலகில் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அபிவிருத்தியானது மனிதனது ஆயுள் எதிர்பார்ப்பில் அதிகளவு நீட்சியினை ஏற்படுத்தியிருப்பினும் தற்காலத்தில் உயிர்க்கொல்லி நோய்களுடனான மனிதனது போராட்டங்கள் அதிகரித்து வரும் போக்கினையே காணக்கூடியதாகவுள்ளது. இத்தகைய உயிர்க்கொல்லி நோய்களில் புற்றுநோயானது முக்கியமான ஒன்றாக காணப்படுவதுடன், இந்நோய்த்தாக்கமானது உலகெங்கும் பல்வேறு வயதுப்பிரிவினரிடையே அதிகரித்துவரும் போக்கினை அவதானிக்கலாம். இலங்கை இதற்கு விதிவிலக்கானதல்ல. புற்றுநோயானது அண்மைக்கால வரலாற்றினைக்கொண்ட ஒரு நோயல்ல. இது கி.மு 2250 களில் காணப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் எகிப்திய பிரமிட்டுக்களிலிருந்து எடுக்கப்பட்ட மனித உடல்களில் மேற்கொள்ளப்பட்ட […]
எமது உணவில் அதிகளவு மரக்கறி வகைகளையும் பழங்களையும் சேர்ப்போமானால் தொற்றா நோய்களின் தாக்கத்தினையும் அவற்றுக்கான மருந்துப்பாவனையையும் பிற்போடலாம். ஆரம்ப காலத்தில் எம் மூதாதையர்கள் எவ்வாறு இவ்வறிவைப் பெற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை. தாவர உணவுடன் இணைந்ததாக தமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருந்ததன் காரணமாகத்தான் எண்பதிலும் எழிலுடன் இருந்தார்கள். அவர்கள் தம் வாழ்வில் வாழ்க்கை முறையாகக் கடைப்பிடித்துக் காட்டியதைத்தான். நீண்ட காலத்தின் பின்பாக இன்றைய விஞ்ஞானம் ஆரோக்கியமாக வாழும் முறையாக வகுத்துச் செல்கின்றது. வயது வந்தவர்கள் ஒவ்வொரு நாளும் […]
நாம் எல்லோருமே நாய் என்றால் நன்றியுள்ள பிராணி, வீட்டின் காவல்காரன் என்றெல்லாம் சிறு வயதில் கற்றுக்கொண்டுள்ளோம். எமக்கும் நாய்க்கும் இடையேயான அறிமுக வார்த்தைகள் மேற்கண்டவாறே அமைந்தன. ஆனால் காலமாற்றத்தில்நாய் என்ற விலங்கின் மீதான எமது புரிதல்களும் மாற்றங்கண்டுள்ளது என்றே கூறலாம். செல்லப் பிராணி வீட்டின் செல்லப்பிராணிகளான நாய்கள் சரியான வளர்ப்பு முறையின்றி இருக்கின்றன.அவற்றின் எஜமானர்கள் கட்டாக் காலிகளாக வீதியோரங்களில் அவற்றை விட்டுவிடுகின்றனர். இதன் விளைவாக அவை பலருடைய வாழ்வின் அழிவுக்கு வித்திடும் எமனாகவும் மாறிவிட்டன. இன்று இடம்பெறுகின்ற […]