You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for December, 2018
நீரிழிவு நோய் மற்றும் அதன் சிகிச்சை முறை தொடர்பாக எம்மவர்கள் மத்தியிலே பல தவறான அபிப்பிராயங்கள் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. தவறான கருத்து: நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனைகளை 40 வயது கடந்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். உண்மை நிலவரம்: நீரிழிவு நோயானது இலங்கை போன்ற தென்னாசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இளவயதிலேயே ஏற்படும் அபாயம் அதிகமாகும். எனவே, நீரிழிவு ஏற்படுவதற்கான அபாய அறிகுறி உள்ளவர்கள் (உடல்பருமனாக இருத்தல், நெருங்கிய குடும்ப உறவினர்களுக்கு நீரிழிவு இருத்தல், நீரிழிவு நோய்க்கான […]
இன்று அதிகளவில் பாதிப்புக்களை ஏற் படுத்தும் தொற்றா நோய்களில் ஒன்றாக நீரிழிவுநோய் காணப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்த நோயின் தாக்கமானது அதிகமாகவுள்ளது. அதுவும் உடல் திணிவுச்சுட்டி (Body Mass Index – BMI) குறைநதவர்களில் கூட இது ஒரு பிரச்சினையாகவுள்ளது. உலகின் 60வீதமான நீரிழிவு நோயாளிகள் ஆசியக் கண்டத்திலேயே வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் தசைநார்களின் பருமன் (Muscle-MaSS) குறை வாகவும், வயிற்றுப்பகுதிகளில் அதிகளவுகொழுப்புப் படிவு ஏற்படுவதுமேயாகும். இவற்றுக்கு மேலாக இவர்களின் வாழ்க்கை முறையும் பெரிய […]