You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for October, 2018
1. தைவாயிட் சுரப்பி தொடர்பான நோய்கள் பற்றிச் சிறிது கூறுங்கள்? தைரொயிட் சுரப்பியில் ஏற்படும் நோய்கள் பல்வேறு வகைப்படும். தைரொயிட் சுரப்பி குறைவாகச் சுரப்பதனால் ஏற்படு கின்ற நோய் (Hypothyroidism), தைவராயிட் சுரப்பி அதிகமாகச் சுரப்பதால் ஏற்படுகின்ற நோய் (Hyperthyroidism) ஆகும். மற்றும் தைரொயிட் சுரப்பியில் ஏற்படுகின்ற பல வகையான புற்று நோய்கள் இவற்றுக்கு உதாரணங்களாகும். 02. தைரொயிட் சுரப்பு குறைவாகச் சுரத்தல் முக்கியமான ஒரு நோயாக உள்ளது. இது பற்றிச் சிறிது விளக்கமாகக் கூறவும்? தைரொயிட் […]
உணர்வழியியல் என்ற மருத்துவ அலகின் ஆங்கிலப்பதம் Anaenthesia (British English) அல்லது Anaen thesiolosy (American English) ஆகும். உணர்வழியியல் என்பது உணர்வை இழத்தல் அல்லது அழித்தல் ஆகும். அதாவது சத்திர சிகிச்சையின்போதுவலி,வேதனைபோன்ற இதரஉணர்வு களைப் போக்கி தேவையேற்படின் நினைவைதற்காலிகமாக இழக்கச் செய்து நோயாளியைப் பராமரித்தலாகும். இந்த வகையான உணர்வழித்தல் பொது மக்களின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட நாளே உலக உணர்வழியியல் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. (World Anesthesia day 1846 William Morton) இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த உணர்வழியியல் […]
பன்னாட்டு நீரிழிவு தினத்தை முன்னிட்டு, யாழ் போதனா மருத்துவமனையின் நீரிழிவுச் சிகிச்சை நிலையம் பாடசாலை மாணவர்களுக்கு இடையேயான போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இவை வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் சித்திரப் போட்டி நிகழ்வுகளாக இடம்பெறும். கட்டுரைப் போட்டிகள் கனிஸ்ட, இடைநிலை மற்றும் சிரேஷ்ட வயதுப் பிரிவு ரீதியாக இடம்பெறவுள்ளன. கனிஸ்ட பிரிவில் தரம் 1 முதல் தரம் 5வரையான மாணவர்களும், இடை நிலைப் பிரிவில் தரம் 6 முதல் தரம் 9 வரையான […]
தாய்ப்பாலானது.ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனித்துவமானது. தாய்ப்பாலூட்டலானது இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் உரித்தான உரிமை மட்டுமன்றி தனித்துவமான தாய்மையை பூரணப்படுத்தும் செயலாகவும் அமைகிறது. வாருடா வருடமும் தாய்ப்பாலூட்டலில் முக்கியத்துவத்தை உணர்துவதற்க்காக ஓகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பாலூட்டல் வாரமாக கொண்டாடப்படுகின்றது. தாய்ப்பாலூட்டுவதன் நன்மைகள் தாய்ப்பாலூட்டுவதனால் சிசு தாய் இருவரும் பல நன்மைகள் அடைகின்றனர். சிசுவிற்கு ஏற்படும் நன்மைகள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல ஊட்டச்சத்துக்களும் உரிய அளவில் அடங்கியுள்ள தால்குழந்தையின் சீரானவளர்ச்சிக்கு உதவுகின்றது. வளர்ச்சியடைந்து வரும் இலங்கை போன்ற நாடுகளில் […]
நோயாளியைத் தட்டி எழுப்புதல் வீட்டில் குளுக்கோ மீற்றர் (Glucometer) இருக்குமாயின் குருதியில் குளுக்கோசின் அளவை அறிந்துகொள்ள வேண்டும். குருதியில் குளுக்கோசின் அளவு குறைந்த நிலையில் காணப்படுமாயின், நோயாளி குடிக்கக்கூடிய நிலையில் இருப்பின் நோயாளிக்கு பானம் அல்லது குளுக்கோசை கரைத்து மெதுவாக பருகக் கொடுக்கலாம். உட்சொண்டு, நாக்கின் அடிப்பகுதி போன்றவை அதிக உறிஞ்சும் தன்மை உடையவை என்பதால், இனிப்பு அதிகம் உள்ள உணவைப் பாணியாகப் பசை போல் செய்து அப்பகுதிகளில் தடவுதல் வேண்டும். நோயாளியின் நிலைமை சரியாக அமையாதவிடத்து […]