You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for September, 2018
நீரிழிவு நோயாளி ஒருவரின் குருதி அழுத்தம் 130/80 mmHG இலும் குறைவாக இருத்தல் நன்று நீரிழிவு நோயாளி ஒருவரில் சராசரி குளுக்கோசின் அளவு நல்ல நிலையில் தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு நீரிழிவால் ஏற்படும் பாதிப்புக்கள் குறைவாகவே இருக்கும். நீரிழிவு நோய் இல்லாத ஒருவரின் குருதியில் குளுக்கோசின் அளவு 70 தொடக்கம் 160MG/DL ஆகக்காணப்படும். அதாவது ஒருநாளில் 3.9 – 8.9 MMOL வரை மாறிமாறி இருக்கும். நீரிழிவு நோய் இருப்பதை உறுதிப்படுத்திய ஒருவர், அதற்குரிய சிகிச்சையை […]
கேள்வி:- 27 வயதான எனது மகளின் நிறையானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்கின்றது. அவரது தற்போதைய நிறை 92Kg ஆகும். அவரது உயரம் 5அடி 4அங்குலம் ஆகும். அவரது மாத சுகவீனமும் ஒழுங்கற்று இருக்கின்றது. இவர் மிக விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றார். எமது குடும்ப வைத்தியரின் ஆலோசனைப்படி சில குருதிப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தோம். அப்பரிசோதனைகளின் படி சலரோகநோய் ஏற்படும் ஆரம்ப நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தார். எனது மகளின் உடல் நிலை பற்றி விளக்கிக் கூறவும். இதனால் […]
நோய்த்தடுப்புக்கும் நோய் குணமாக்கலுக்கும் உரிய சாதனமாக இயற்கை விளங்குகிறது காற்று ஐம்பூதங்களுள் இயற்கையின் தனித்துவக் கூறாக நித்தமும் உயிர்நிலை வருடுகின்ற சுத்தமான காற்று பலவிதநோய்களையும் குணப்படுத்துகிறது. நுரையீரலைப் பாதுகாத்துக்கொள்கிறது. ஆம், பருவ காலத்துக்கு ஏற்ப காற்றுப் பலமாக வீசத் தொடங்கும் சந்தர்ப்பங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் ளின் எண்ணிக்கை குறைவடைகின்றமை இதற்குத் தக்க சான்றாக அமைந்துள்ளது. இயற்கையான காற்றை நாம் நிறைவாக சுவாத்தியம் செய்ய வேண்டும். அவற்றைத் தடுத்து நிறுத்தி கதவடைப்புச் செய்து விடக்கூடாது. உண்மையில் நாங்கள் […]
எமது உடலில் பல்வேறு காரணங்களாலும் காயங்கள் ஏற்படலாம். உராய்தல் மூலம் ஏற்படும் காயங்கள், வெட்டுக்காயங்கள், குத்துக்காயங்கள், கிழிவுக்காயங்கள் போன்றன பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர மனிதனால் திட்டமிட்டுச் சத்திர சிகிச்சையின் போது காயங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதில் முதல் வகைக் காயங்களில் தொற்றுதல் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் மிகவும் அதிகம். ஆனால், சத்திரசிகிச்சையின் போது ஏற்படுத்தப்படும் காயங்களில் தொற்றுதல் ஏற்படு வது மிகவும் அரிது. இவ்வாறு தொற்றுதல் ஏற்படுவதற்கு காயங்களில் காணப்படும் இறந்த கலங்கள், காயப்பகுதிக்குப் போதியளவு ஒட்சிசன் […]