You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May, 2018
புகையிலையின் பிறப்பிடம், அமெரிக்கா, 15 நூற்றாண்டில் புதுநாடுகளைக் கண்டுபிடிக்கும் நோக்கில் கொலம்பசும் மாலுமிளும் அமெரிக்காவைச் சென்றடைந்த போது அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்கள் புகைப்படித்துக் கொண்டிருப்பதை ஆச்சரியத்துடனும் வியப்புடனும் அவதானித்தனர். எப்படி அதனைப் பயிர் செய்கின்றார்கள் என்பதையும் அறிந்தனர். பின்னர் ஸ்பெய்ன், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பரவி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகமாகி 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முகாலாயப் பேரரசர் அவையில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்பட்டு, பின் ஐம்பது ஆண்டு காலத்துக்குள் உலகெங்கும் மிகவேகமாக பரவியது. […]
அசுத்தமான சூழலில், தூசுகளுடனும் நோய்களுடனுமான வாழ்க்கைப் போராட்டத்தை நிறுத்தி அமைதியான அழகான ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்திட யாருக்குத்தான் விருப்பமில்லை. அவ்வாறான சூழலை எவ்வாறு உருவாக்குவது எவ்வாறு பேணுவது என்பதில்தான் நாம் அக்கறையுடன் கருமங்கள் ஆற்றுவதில்லை. ஒரு நகரின் சுத்தம் யார் கைகளில் உள்ளது? எனது நாளாந்த செயற்பாடுகளை எனது நகரின் சுத்தத்திற்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் ஆற்றுகிறேனா? என்னால் தினமும் கிலோக்கணக்கில் உருவாக்கப்படும் குப்பைகள் தொன் கணக்கில் நகரின் குப்பையாக மாறிவிடும் என்பதை அறிவேனா? இது எனது […]
நீரிழிவு நோயின் அறிகுறி, இனங்காணும் முறை, நோயின் தன்மை, நோயின் கனதி உள்ளிட்ட பல விடயங்கள் மருத்துவருக்கும் நபரொருவருக்கும் இடையிலான உரையாடல் பாணியில் இங்கு தரப்படுகிறது. கேள்வி:- 27 வயதான எனது மகளின் நிறையானது சிறிது சிறிதாக அதிகரித்துச் செல்கின்றது. அவரது தற்போதைய நிறை 92Kg ஆகும். அவரது உயரம் 5அடி 4அங்குலம் ஆகும். அவரது மாத சுகவீனமும் ஒழுங்கற்று இருக்கின்றது. இவர் மிக விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றார். எமது குடும்ப வைத்தியரின் ஆலோசனைப்படி சில […]