You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April, 2018
தைரொயிட் பிரச்சினையுள்ள நோயாளருக்குக் குறிப்பாக கர்ப்பவதிகள் தெரிந்திருக்கவேண்டிய நடை முறைகள் முதன்மையாக நோக்கப்பட வேண்டியவை. தைரொயிட் நோயின் தன்மை, அதற்கான குளிசை மருந்துகளின் அளவு மற்றும் குருதிப் பரிசோதனை (தைரொயிட் ஓமோன்) செய்யும் கால இடைவெளி போன்றன கர்ப்பக்காலத்தில் சாதாரண நோயாளரைப் போன்றல்லாது வேறுபடுகின்றன. மருத்துவர் பரிந்துரை செய்து வழங்குகின்ற மருந்தைச் சரியான முறையில் கிராமமாக உள்ளெடுத்தல் வேண்டும் கர்ப்பகாலத்தில் முதல் 12 வாரங்கள் மிக முக்கிமானகால கட்டம் இந்தக் காலப்பகுதியின் போதே பிறக்கபோகும் குழந்தையின் மூளை […]
நீரிழிவு நோயாளிகளுக்கு கால் புண் ஏற்படுவதற்கான காரணிகள் எவை? கால் நரம்புகளின் செயற்பாடு குறைவடைந்து தொடுகை மற்றும் நோவு போன்ற உணர்ச்சிகளற்றுக் காலில் விறைப்புத்தன்மை ஏற்படல். கால்களுக்கான குருதி ஓட்டம் நலிவடைதல். நீரிழிவு கட்டுப்பாடு குறைவடைதலும் குருதியில் சீனியின் அளவு அதிகரித்தலும். கிருமித் தொற்றுக்கள் ஏற்படல். பாதம் மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் ஏற்படும் தோல் தடிப்புத் தன்மை, தொப்புளங்கள் மற்றும் கண்டல் காயங்கள். கால் விரல்களுக்கிடையில் ஏற்படும் கிருமித் தாக்கம். கால் விரல் நகக்கணுக்களில் ஏற்படும் கிருமித்தாக்கம். […]
கடந்த சில வாரங்களாக யாழ்ப்பாணத்தில் நிலவும் உச்ச வெயில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையில் சில கட்டாய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெயிலினால் எமது உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. தோலில் ஏற்படும் சாதாரண மாற்றங்களிலிருந்து (பருக்கள்) வெப்ப அதிர்ச்சி எனப்படும் பாரதூரமான நோய் வரை வெயிலினால் ஏற்படும் தாக்கம் விரிவடைந்துள்ளது. வெப்ப அதிர்ச்சி மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. அல்லது எமது மனித உடலின் முக்கிய அங்கங்களான […]
ஒருகருவும் ஒருவிந்தும் மேற்கொள்ளும் கருக்கட்டலைத் தொடர்ந்து, தாயிடமிருந்து பெறப்பட்ட 23 நிறமூர்த்தங்களும் தந்தையிடமிருந்து கடத்தப்பட்ட 23 நிறமூர்த்தங்களும் ஒன்று சேர்ந்து 23 சோடிகள், அதாவது 46 நிறமூர்த்தங்களாக விளைவாக்கப்பட வேண்டும். இந்த தன்மையில் இருந்து மாறுபட்டு 21ஆவது சோடி நிறமூர்த்தத்துடன் மேலதிகமான ஒரு நிறமூர்த்தம் சோடி சேர்ந்து கொள்வதால் 47 நிறமூர்த்தங்கள்விளைவாக உருவாக்கப்படும். நிலையே “மங்கோலிஸ’ தன்மைக்குரிய காரணமாக கொள்ளப்படுகிறது. உலக மங்கோலிஸ விழிப்புணர்வு தினம் அந்தவகையிலே ‘மங்கோலிஸ’ நிலமை தொடர்பில் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எற்படுத்தும் […]