You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for March, 2018
நோய் நொடியற்ற ஆரோக் கியமான சுகவாழ்விற்கு உடற்பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது. நேரமின்றி தொழில் புரியும் மனிதன் உடற்பயிற்சியின் பயன்கள் பற்றியோ அதன் முக்கியத்துவம் பற்றியோ அக்கறை கொள்வதில்லை. ஆரோக்கிய வாழ்விற்கு உடற்பயிற்சி இன்றியமையாதது என்பதனாலேயே உடற்பயிற்சியின் முக்கியத்துவம் பாடசாலைகளிலும் தொழில் நிறுவனங்களிலும் வலியுறுத்தப்படுகின்றது. உடற்பயிற்சியினை வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகக் கொண்டு வருவதற்காக பாடசாலைகளில் சிறுவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வேறுபல விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன. இருப்பினும் இதில் பங்குபற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் […]
உலகில் அறியப்பட்ட உடற் பயிற்சிகளில் நீச்சலே உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது என்கிறது விஞ்ஞானம். ஒரு மணிநேர நீச்சலில் உடலில் அத்தனை தொகுதிகளும் பழுது பார்க்கப்பட்டு அவற்றின் தொழிற்பாடு சீராகி விடுகிறது. இன்று எம்மை அச்சுறுத்தும் நீரிழிவு, கொலஸ்ரோல், இதய நோய்கள், உயர் குருதியமுக்கம் என்று அத்தனைக்குமே ஒழுங்கான நீச்சல் பயிற்சி சிறந்த நிவாரணி. நீரிழிவு நோயாளிகள் தொகை ஆசியாவில் மிகவும் அதிகம் இன்றைய நிலையில், வெகு சீக்கிரத்தில் வீட்டுக்கு ஒரு நீரிழிவு நோயாளி என்ற நிலை […]
“அரிது அரிது மானிட ராய் பிறத்தல் அரிது” என்பது ஆன்றோர் வாக்கு. இத்தகைய பெறுதற்கரிய பிறவியிலே கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு காலப்பகுதியும் சுவாரசியமானது. அதிலும் முதுமைக் காலம் மிகவும் சுவாரசியமானது. பட்டாம்பூச்சியாய்சிற கடித்த பள்ளிப்பருவம், சுற்றித்திரிந்த கட்டிளமைப் பருவம், ஓடி ஓடி உழைத்த இளமைப்பருவம் ஆகியவற்றின் வரிசையில் உழைத்து இளைத்துப் போய் ஓய்வெடுக்கும் காலமே இந்தமுதுமைக்காலம் ஆகும். நோய்களின் இருப்பிடமாகும் முதுமை மனிதன் முதுமை அடையும் போது என்புகள் தசைகள் வலு இழத்தல், நரம்புகளின் […]
நீரிழிவு நோயாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் என்பன தொடர்பில் மருத்துவருக்கும் நோயாளர்களுக்கும் இடையில் நடைபெறும் கதையாடல்போன்று இந்தக் கட்டுரை நகர்கிறது. மெற்போமின் மருத்து தொடர்பில் மருத்துவ ஆலோசனை அவசியம் கேள்வி: எனது வயது 56 ஆகும். நான் மெற்போமின் மருந்தை (500மி.கி.) நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த கடந்த 5 வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றேன். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குருதிப் பரிசோதனைகளின் படி எனது நீரிழிவு நோய்க் கட்டுப்பாடானது சிறந்த முறையில் உள்ளதாக மருத்துவர் கூறியிருந்தார். எனது உறவினர்கள் […]