You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for January, 2018
இன்றைய காலகட்டத்தில் வீதி விபத்துக்களினால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடிய தாக உள்ளது. ஒவ்வொருநாளும் பத்திரிகைகளை வாசிக்கும் போது விதிவிபத்து தொடர்பான ஒரு செய்தியையாவது காணக் கூடியதாக உள்ளது. பச்சிளம் பாலகனிலிருந்து தள்ளாத வயது வயோதிபர் வரை வீதி விபத்துக்களில் சிக்குவதைக் காணமுடிகின்றது. முப்பதாண்டுகாலப் போரினால் மடிந்து போன உயிர்களை விட விதி விபத்துக்களினால் உயிரிழந்தோரின் எண்ணிைக்கையானது அதிகமானதென அண்மைய புள்ளி விவரமொன்று எடுத்துக்காட்டுகின்றது. அதிகரித்த வாகனங்களின் பயன்பாடு விதி ஒழுங்குகளை மதியாது நடக்கின்ற […]
தைரொயிட்தொடர்பான பிரச்சினையுள்ள பெண்ணொருவர் கர்ப்பம் . தரிக்க விரும்பினால் அவருக்கு எவ்வாறான ஆலோசனைகளை வழங்க விரும்புகிறீர்கள்? பெண்ணொருவருக்குள்ளதைரொயிட் பிரச்சினை என்பது தைரொயிட் சுரப்பு குறைவாக இருக்கும் நிலையாகவோ அல்லது தைரொயிட் சுரப்பு அதி களவில் சுரப்பதால் ஏற்படும்பிரச்சினையாகவோ இருக்கலாம்.தைரொயிட்சுரப்புகுறைவாகவுள்ளேர்சோம்பல், அதிகநித்திரை, உடற்பருமன் அதிகரித்தல், மலச் சிக்கல், மாதவிடாயின்போது அதிகளவு வெளி யேறுதல் மற்றும் குளிர்தாங்க முடியாதிருத்தல் போன்ற குணங்குறிகளைக் கொண்டிருப்பர். இவர்களுக்கு கழுத்துப் பகுதியில் கழலையோ, விக்கமோ இருக்கலாம் அல்லது இல்லாதிருக் கலாம். இவ்வாறான குணங்குறிகளைக் கொண்டிருப்போர் […]
அகஞ்சுரக்கும் தொகுதியியல் வரையறை எமது உடலில் பல வகையான ஓமோன்களைச் சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. அந்த வகையிலே இவை அனைத்தையும் ஒருசேர இணைத்து ஒட்டு மொத்தமாக அகஞ்சுரக்கும் தொகுதியென வரவிலக்கணப்படுத்துகிறோம். இந்த அகஞ்சுரக்கும் தொகுதியில் ஏற்படும் நோய்கள் தொடர்பில் ஆராயும் பிரிவு அகஞ்சுரக்கும் தொகுதியியல் (Endocrnology) என அழைக்கப்படுகிறது. இது பொது மருத்துவத்தின் (General medicine) முதன்மைப்பிரிவாக கருதப்படுகின்றது. தவிர, இன்றைய காலச்சுழற்சியின் வேகத்தில் பொது மருத்துவத்துறையானது மேலும் பல உப பிரிவுகளைக் கொண்டு சிறந்த முறையில் […]