You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for November, 2017
“லிவோத்றொக்ஸின்” Levothyroxine பயன் தைரொயிட் ஓமோன் சுரப்பைக் கூட்டுவதற்கு இந்த மருந்தைப் பாவிக்கலாம். பாவனை இந்த மருந்தை தினமும் வெறு வயிற்றில் உள்ளெடுத்தல் வேண்டும். குறிப்பாக காலை உணவு அல்லது தேநீர்வேளைக்கு அரை அல்லது ஒருமணத்தியாலங்களுக்கு முன்பாக உள்ளெடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவும். ஒரு குவளை தண்ணிருடன் மருந்தை உள்ளெடுக்கவும். இந்த மருந்தை உள்ளெடுக்கும் 2 மணத்தியாலகாலப் பகுதிக்கு வேறெந்த மருந்துகளையும் உள்ளெடுக்கக்கூடாது. குறிப்பாக, கல்சியம், இரும்பு அலுமினியம் கொண்டுள்ள அமிலநீக்கிகள், விற்றமின்குளிசைகளை உள்ளெடுப்பதைத் தவிர்க்கவும். […]
உடற்பருமன் என்பது “உடலின் உயரம் மற்றும் வயது என்பவற்றுக்கிடையேயான தொடர்பில் அதிகரித்த கொழுப்புச்சத்து அசாதாரணமாக தேங்கி நிறை அதிகரிப்பை ஏற்படுத்தல்” என பொருள்கொள்ளப்படுகிறது எமது நாளாந்த செயற்பாடுகளில் தேவையான அளவு கலோரிப்பெறுமானத்துக்கு அதிகமான உணவுப்பதார்த்தங்கள் அதாவது,காபோவைதரேற்று ஈரலிலும், தசைக்கலங்களிலும் சேகரிக்கப்படுகிறது. இதேபோல கொழுப்புதோலின் அடிப்பகுதியிலும்,உள் அவயங்களைச் சுற்றியும், குருதிக்குழாய்களிலும் படிவுறுகின்றது. உடற்திணிவுச் சுட்டெண் பன்னாட்டு ரீதியாக ஒருவரின் பால், வயது, உயரம் என்பவற்றின் அடிப்படையில்உடற்திணிவுச்சுட்டெண் காணப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரும் இதனை அறிந்து வைத்திருப்பதன் மூலம் தமது உடற்பருமன் […]
அதிக சுவையின் காரணமாக ஆரோக்கியமற்ற துரித உணவுகள் இன்று பிரபல்யம் பெற்று வருகின்றன. உணவுகளின் பெயருக்குமாறாக இந்த உணவுகளின் சந்தைப் பெறுமதி அதிகமாக இருப்பதோடு இவற்றின் சுவையானது ஆரோக்கியத்துக்குக்கேடான அதிக சீனி, அதிக உப்பு எண்ணெய் போன்றவற்றின் சேர்க்கை காரணமாகவே ஏற்படுத் தப்படுகின்றது. அதிக அளவிலான சீனி மற்றும் கொழுப்புக்கள் உள் ளடக்கப்பட்டிருப்பதனால், இவை அதிக கலோரிகளைக் கொண்டுள்ளதுடன் குறைவான நுண்ணுரட்டச் சத்துக்களையே கொண்டுள்ளன. வெற்றுக்கலோரி உணவுகள் என்றும் இவற்றை அழைப்பு துண்டு. இவை போசணைக்கூறுகளான புரதம், […]
இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் ஒன்றாக சிறுநீரகப் பாதிப்பு விளங்குகிறது. குறிப்பாக, வடமத்திய மாகாணத்திலுள்ள அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களும் இவற்றின் அருகாகவுள்ள புத்தளம், வவுனியா, குருநாகல் ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களும் உள்ளடங்கலாக நாட்டின் ஏனைய சில பிரதேசங்களுக்கும் இப்பாதிப்பு பரம்பலடைந்துள்ளது. சிறுநீரக நோய் உயிராபத்து மிக்க சிறுநீரக நோய்ப் பாதிப்பு முன்னொரு போதுமே ஏற்படாத அளவுக்கு ஏற்பட்டிருப்பது பல்வேறு தரப்பினரதும் அவதானத்தைப் பெற்றுள்ளது. இந்த நோய்ப்பாதிப்புக்கான காரணம் என்ன..? […]