You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for June, 2017
நீரிழிவு எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒரு நீண்டகால நோயாகும்.அந்த வகையிலே இந்தக்கட்டுரையானது கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளர்களிடையே ஏற்படும் வாய்க்குழி சம்பந்தமான பிரச்சினைகள்(Complication) பற்றிபேசுகின்றது. சாதாரணமானவர்களை விடவும் கட்டுப்பாடற்ற நிரிழிவு நோயாளர்களிடையே வாய்க்குழி சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படுகின்றன. பாதிக்கப்படும் வீதமும் அதிகரிக்கின்றது. பொதுவாக வாய்க்குழி மென்சவ்வே அதிகம் பாதிப்படைகிறது. பற்களைத்தாங்கும் முரசு என்பு நாரிழையங்களில் ஏற்படும் அழற்சி (Periodontitis), உமிழ்நீர் சுரப்பு சுரத்தலின் பாதிப்பு (Gingivitis), உமிழ்நீர் சுரக்கும் அளவும் தன்மையும் மாறுதல்சுவையில் மாற்றம் ஏற்படுதல், பக்ரிறியா […]
இன்று நீரிழிவு நோயானது உலகை ஆட்டிப்படைக்கும் சவால்மிக்க நோயாக மாறிவருகின்றது. நீரிழிவிற்கான உலக கூட்டமைப்பானது தற்போது உலகில் 415 மில்லியன் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்தத் தொகையானது 2040 ஆம் ஆண்டளவில் 640 மில்லியனாக இருக்கும் என்றும் கணிப்பிட்டுள்ளது. இதில் தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் 78.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர் என்றும் இந்தத் தொகை 2040 இல் 140.2 மில்லியனாக இருக்கும் என்றும் குறிப்பிடுகிறது. ஆக, இந்த நோயின் தாக்கம் என்பது எவ்வளவு பாரதூரமான விளைவுகளையும் […]
பன்னாட்டு ரீதியில் நீரிழிவு போன்ற தொற்றா நோய்கள் பல்கிப் பெருகி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இலங்கை போன்ற வளர்முக நாடு களிலும் சிறிது சிறிதாக இவற்றின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. மிக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி கொழும்புநகரப் பகுதியில் ஏறக்குறைய23 சதவீதத்தினர் நீரிழிவு அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலையால் (prediabetes) பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இனங்களை ஒப்பிடுகையில் இலங்கைத் தமிழரிடையே நீரிழிவு ஏற்படும் சதவீதம் அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாகவுள்ளது. எமது மக்களிடையே சீனி மற்றும் மாச்சத்துப் பாவனையானது அதிகமாக இருப்பது […]
நீரிழிவு ஓர் அறிமுகம் நீரிழிவு நோயானது‚ சதையினால் சுரக்கப்படும் இன்சுலின் ஓமோன் சுரப்பு பெருமளவில் குறைவடையும் போது அல்லது அதன் தொழிற்பாட்டில் பாதிப்பு ஏற்படும் போது‚ குருதியில் குளுக்கோஸ் எல்லை மீறி அதிகரிப்பதால்ஏ ற்படுகிறது. அதிகரிக்கும் குருதிக் குளுக்கோஸானது உடலின் பல அங்கங்களில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. முக்கியமாக கண்‚ நரம்புத் தொகுதி இதயம் மற்றும் சிறுநீரகத்தை இது வெகுவாக பாதிக்கின்றது. கடந்த இரு தசாப்தங்களாக உலகளாவியரீதியில் நீரிழிவு நோயானது பெருமளவில் அதிகரித்துள்ளது. ஆண்‚பெண் இருபாலாரையும் நீரிழிவு […]
கர்ப்பம் தரித்தல் எல்லோராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுவதாகும். இது அந்த தாயின் முதலாவது பிள்ளையாக இருக்கலாம் இல்லை நான்காவது பிள்ளையாக இருக்கலாம். எத்தனையாவது கர்ப்பம் என்றாலும் சில சந்தேகங்கள் எல்லாரிடமும் இருக்கும். இதே மாதிரி திருமணமானவுடன் புதுமணதம்பதிகள் விரும்பியோ விரும்பாமலோ எதிர்நோக்கும் ஒரு கேள்வி “இன்னும் வயிற்றில் ஒன்றும் உருவாக இல்லையா” என்பதாகும். கர்ப்பமாகிய முதல் மூன்று மாதங்களும் மிகவும் முக்கியமானது. இந்த ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம். பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் […]