You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for May 8th, 2017

தோற்றா நோய்களின் தாக்கத்திலிருந்தும் அவற்றின் பாரதூரமான பின் விளைவுகளிலிருந்தும் மீளவேண்டுமாயின் உடற் பயிற்சி ஒவ்வொருவருக்கும் அவசியமானதொன்றாகும். இதன் முக்கியத்துவம் இன்று எல்லாத்தரப்பினராலும் உணரப்பட்டுவருகிறது. நாம் உடற்பயிற்சிசெய்ய ஆர்வத்துடன் இருப்பினும் அதற்கான நேரத்தைக்கண்டுபிடிப்பதே சிரமமாக உள்ளது. இயந்திரத்தன்மையான இலத்திரனியல் வாழ்வியல் நடைமுறையில் உடற்பயிற்சிக்கான நேரம் காணாமலேயே போய்விட்டது. அவ்வாறு உடற்பயிற்சி செய்வதற்கான நேரம்கிடைக்காதோரும், நேரத்தைக்கண்டுபிடிக்க முடியாதோரும் வழக்கப்படுத்திக் கொள்வதற்கான சில குறிப்புக்கள் இங்கே முன்னிலை பெறுகிறது. வாழ்வில் இயலுமாயின் இவற்றை நடைமுறைப்படுத்த முயற்சித்துப்பார்க்கலாமே. வேலைத்தளங்களில் மாடிகளில் ஏறுவதற்கு மின் […]