You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for April, 2017
உலக சுகாதார நிறுவனமானது நிறுவப்பட்ட தினத்தை நினைவு கூரும் முகமாக வருடந்தோறும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதியன்று பிரத்தியேகமான ஏதேனுமொரு சுகாதாரம் சார்பான விடயத்தை அழுத்தமாகக் கதைப்பதுண்டு. அந்தவகையில் 2017ஆம் ஆண்டுக்குரிய தொனிப்பொருளாக அமைவது யாதெனில் “மனச்சோர்வினைப் பற்றிக் கதைப்போம்” என்பதே மனச்சோர்வானது உலகத்தில் எந்த மூலைமுடுக்கெங்கிலும் வசிக்கின்ற எல்லா வயதுடையவர்களையும் வாழ்க்கையில் எல்லாவிதகட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது எமது வழக்கமானதும் இலகுவானதுமான நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளில் மட்டுமல்லாது எம்முடன் சேர்ந்து வாழ்க்கை வட்டத்தை இயக்கிச்செல்கின்ற குடும்பம் […]
மங்கோலிஸநிலைமையானது 21ஆம்பரம்பரை அலகில் ஏற்படும் பிறழ்வானசேர்க்கையால்பிறப்பின்போதே உடல் உளசார்பான அசாதாரண குணங்குறிகளைக்காட்டுவதைக் குறிப்பிடும். இந்த நிலைமையானது (JoHn London Down) இனால் விவரிக்கப்பட்டமையால் அவரின் பெயரால்”Down Syndrome“ என அழைக்கப்படுகிறது. இந்த நிலையானது உடல் வினைத்திறன் மற்றும் மூளையின் வினைத்திறனைப்பின்னடைவான வளர்ச்சியிலேயே கொண்டுசெல்லும் தாயின் கர்ப்பகால வயது 35 வருடங்களைத்தாண்டுகையில் பிறக்கும்பிள்ளைகள் இவ்வாறான குறைபாடுகளைக் கொண்டிருக்க சாத்தியப்பாடு உள்ளது. இந்தநிலைமையை அறிந்து கொள்வதற்காக கர்ப்பகாலத்திலேயே தாயின் வயிற்றை ஸ்கான்செய்து பார்த்தல்தாயின் வயிற்றினூடு ஊசியைச் செலுத்தி சிசுவைச்சுற்றியுள்ள சடை […]
ஓர் ஆணின் கல்வி தனி ஒருவனை உருவாக்கும். ஆனால் ஒரு பெண்ணின் கல்வி ஒருநாட்டையே வளமாக்கும்” இவ் ஆபிரிக்க நாட்டு பழமொழி சுட்டி நிற்பதைப்போல் பெண்களின் ஆரோக்கியமானது வீட்டினதும் நாட்டினதும் ஆரோக்கியமாகும். ஒரு பெண்ணே குடும்பத்தின் சகல நலன்களிலும் தலையாய பொறுப்பைத்தாங்குகின்றாள். வீட்டிலுள்ள தாய், தலைவி நோய்வாய்ப்பட்டால் வீடே படுத்துவிடும். அதாவது பெண்ணின் ஆரோக்கியமே மக்களினது ஆரோக்கியமாகும். ஒரு தாயின் பராமரிப்பிலேயே பிள்ளைகளின் எதிர்காலம் அழகான அமைதியான வீட்டுச்சூழல் என்பன தங்கியிருக்கின்றன. ஆகவே பெண்கள் தங்கள்ஆரோக்கியத்தை கண்களை […]