You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for February 14th, 2017

பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுகாதாரத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதற்கும் அவற்றை அவர் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை தம்செயற்பாடுகள்மூலம் அறிந்து கொள்வதற்குமாகவும் பாடசாலை சுகாதாரக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. மாணவர்களின் சுகாதார நன்னிலையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலையிலும் இந்தக்கழகம் உருவாக்கப்படல் வேண்டும் ஏற்கனவே இருக்குமாயின் அதனை உயிர்ப்பாக்கி அதன் செயல்வீச்சை அதிகரித்திடல் வேண்டும். பாடசாலைகளை சுகாதாரத்தை மேம்படுத்தும் அமைப்புக்களாக மாற்றுவதில் இந்தக் கழகங்கள் முக்கிய பங்காற்ற முடியும். இந்தக்கழகம் செவ்வனே இயங்குவதை பாடசாலை அதிபர் கண்காணித்து அதன் செயற்பாட்டை […]