You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for February, 2017
உடலின் தசையி சுரப்பியினால் ( Pancreas B cell ) சுரக்கப்படும் ஹோர்மோன் இன்சுலின் (Insulin) ஆகும். இது உடலின் உயிர்க் கலன்களுக்குத் தேவையான குருதியிலுள்ள குளுக்கோசை உயிர்க்கலத்தினுள் உற்செலுத்த உதவுகின்றது. இன்சுலின் தொழிற்பாடு குறைவதனாலோ ( Insulin resistant) அல்லது தசையி சுரப்பியினால் குறைவதாக சுரப்பதனாலோ அல்லது சுரக்கப்படும் இன்சுலின் தரம் குறைவதனாலோ இது போன்ற காரணங்களால் குருதியிலுள்ள குளுக்கோசின் அளவு கூடி இறுதியில் சிறுநீருடன் வெளிச் செல்வதே நீரிழிவு ஆகும். இதனை ( Diabetes […]
குழந்தையின் வளர்ச்சிப்படிமுறையைப் பிரதானமாக நான்கு எல்லைகளாகப் பிரிக்கலாம். அவையாவன: குழந்தைப் பருவம், முன்பள்ளிப்பருவம், இடைத்தர சிறுவர் பராயம் மற்றும் இளைஞர் பருவம் ஆகும். சிறுவர் பராயத்தின் முற்பாக விருத்திப் படிமுறையானது பிறந்தது முதல் இருவயது வரை உள்ளபகுதியை உள்ளடக்குகிறது. இந்தக் காலப்பகுதியில் உடல் ரீதியான இயக்கச் செயற்பாடுகள் மற்றும் விவேகம் சார்பான விடயங்கள் எவ்வாறு காணப்பட வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். இவ்வறிவானது சிறுவரொருவரை வளர்த்தெடுக்கும் பொறுப்பிலுள்ள யாவருக்கும் தேவையானதாகும். முதலில் 4 மாதகால பிள்ளையின் திறன்களை […]
பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுகாதாரத் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதற்கும் அவற்றை அவர் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும் வழிமுறைகளை தம்செயற்பாடுகள்மூலம் அறிந்து கொள்வதற்குமாகவும் பாடசாலை சுகாதாரக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. மாணவர்களின் சுகாதார நன்னிலையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு பாடசாலையிலும் இந்தக்கழகம் உருவாக்கப்படல் வேண்டும் ஏற்கனவே இருக்குமாயின் அதனை உயிர்ப்பாக்கி அதன் செயல்வீச்சை அதிகரித்திடல் வேண்டும். பாடசாலைகளை சுகாதாரத்தை மேம்படுத்தும் அமைப்புக்களாக மாற்றுவதில் இந்தக் கழகங்கள் முக்கிய பங்காற்ற முடியும். இந்தக்கழகம் செவ்வனே இயங்குவதை பாடசாலை அதிபர் கண்காணித்து அதன் செயற்பாட்டை […]
டெங்குக் காய்ச்சலானது நுளம்பால் பரப்ப படும் டெங்கு வைரஸ் இனால் உருவாக்கப்படும் ஒரு தொற்றுநோய் ஆகும். இது பெரும்பாலான வெப்பவலய நாடுகளை பாதிக்கும் என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே. வைரஸ் தொற்றானது மனிதனுக்கு மனிதன் நேரத்துக் நேரம்மாறுபட்ட அறிகுறிகளை அதாவது சாதாரண காய்சல் (Dengue fever) தொடக்கம் உயிர்கொல்லும் டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் (Dengue Haemorrhagic fever) மற்றும் டெங்கு அதிர்ச்சி நிலை (Dengue Shock syndrome) போன்றவற்றையும்ஏற்படுத்தலாம். இதுஅனை வரையும் பாரபட்சமின்றிப் பாதித்தாலும் சிறுவர்கள், […]
நாம் உண்ணும் உணவானது சுத்தமாகவும் பாதுகாப்பானதாகவும் இருத்தல் வேண்டும். நுண்ணங்கிகளின் தாக் கத்தால் அவற்றின் தரம் பாதிப்புறும். உணவு நஞ்சாவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம். பழுதடைந்த உணவின்நிறம், சுவை, உள்ளடக்கம் என்பனவும் மாற்றத்துக்குள்ளாகும். ஆனால் இவை பழுதுற்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நிகழும் எனக் கூறமுடியாது. பழுதடைந்தஉணவானது பலஅசெளகரியங்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்தலாம். எனவே இவற்றை இனங்காணும் ஆற்றலை வளர்த்துக்கொள்வோம். ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்யும்போது எப்பொழுதும் சுத்தமானதும் புதியனவானதுமான உணவு வகைகளையே தேர்வுசெய்வோம். பழங்கள் வெடித்த சேதமுற்ற நிறம் மாறிய, […]