You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for October 26th, 2016

உலக நீர்வெறுப்பு நோய் தினம் வருடா வருடம் செப்ரெம்பர் 28 ஆம் திகதியன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. நீர்வெறுப்பு நோயானது மிருகங்களிடமிருந்து மனிதனுக்குக் கடத்தப்படுகிறது. எவ்வாறெனில், ஒரு வைரஸான Rabies Virus ஆனது தங்கி வாழ்வதற்கான சிறந்த இடமாக விலங்குகளின் உடல் காணப்படுகின்றது. இவ்வகையான வைரஸினால் பீடிக்கப்பட்ட விலங்குகளிலிருந்து மனிதனுக்கு கடத்தப்படுவதன் மூலம் ஏற்படும் இறப்புக்களில் 95வீதத்துக்கு மேலான இறப்பானது நாய்க்கடியினால் ஏற்படுகிறது. இவ் வைரஸானது உடலின் மூடிய தோலினூடாக எம் உடலினுள் செல்லாது. இவ் வைரஸானது விலங்கு களிலிருந்து […]