You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for October, 2016
மன அழுத்தமானது உடலில் நோய், விபத்து, சோகம், கவலை, பயம், யோசனை, குளிர் அதிக சூடான காலம், கோபம், கடன், இழப்பு போன்ற பல காரணங்களாலோ அல்லது வெளித்தாக்கத்தினாலோ ஏற்படுகின்றது. இவ்வாறு எல்லாவித மன அழுத்தத்தினாலும் பாதிக்கப்படுவது மூளையே ஆகும். இவ்வாறு பாதிக்கப்படும் போது எமது மூளையில் இருந்து சைகைகள் (அறிவுறுத்தல்கள்) ஓமோன்களைச் சுரக்கும் சுரப்பிகளுக்கு அனுப்பப்படுகின்றன. உதாரணமாக அதிரினலின் (Adrenaline) நோர் அதிரினலின் (Nor Adrenaline) குளுக்ககோன் (Gucagon) கோட்டிசோல் (Cortisol) வளர்ச்சி ஓமோன் (Growth […]
உலக நீர்வெறுப்பு நோய் தினம் வருடா வருடம் செப்ரெம்பர் 28 ஆம் திகதியன்று அனுஸ்டிக்கப்படுகின்றது. நீர்வெறுப்பு நோயானது மிருகங்களிடமிருந்து மனிதனுக்குக் கடத்தப்படுகிறது. எவ்வாறெனில், ஒரு வைரஸான Rabies Virus ஆனது தங்கி வாழ்வதற்கான சிறந்த இடமாக விலங்குகளின் உடல் காணப்படுகின்றது. இவ்வகையான வைரஸினால் பீடிக்கப்பட்ட விலங்குகளிலிருந்து மனிதனுக்கு கடத்தப்படுவதன் மூலம் ஏற்படும் இறப்புக்களில் 95வீதத்துக்கு மேலான இறப்பானது நாய்க்கடியினால் ஏற்படுகிறது. இவ் வைரஸானது உடலின் மூடிய தோலினூடாக எம் உடலினுள் செல்லாது. இவ் வைரஸானது விலங்கு களிலிருந்து […]
சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான சித்திரம் மற்றும் கவிதைப் போட்டி 2016 கீழே தரப்பட்டுள்ள விளக்க முறைகளுக்கேற்ப போட்டி சம்பந்தமான சகல ஆக்கப் பிரதிகளும் சமர்ப்பிக்கப்படவேண்டும். ஆக்கப்பிரதிகளை முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் நீரிழிவு சிகிச்சை நிலையம், யாழ். போதனா வைத்தியசாலை. யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு 04.11.2016 இற்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்கவும். பிந்தி வரும் ஆக்கப் பிரதிகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது தலைப்பு “நீரிழிவை வெற்றி கொள்வோம்” […]
கீழே தரப்பட்டுள்ள விளக்க முறைகளுக்கேற்ப போட்டி சம்பந்தமான சகல ஆக்கப் பிரதிகளும் சமர்ப்பிக்கப்படவேண்டும். ஆக்கப் பிரதிகளை முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இலங்கை நீரிழிவு சம்மேளனம் மே/பா இலங்கை அகஞ்சுரக்கும்நிபுணர்களின் கல்லூரி இல.6 விஜேராம ஹவுஸ் விஜேராம மாவத்தை கொழும்பு 7 என்ற முகவரிக்கு இந்த மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும். பிந்தி வந்து சேரும் ஆக்கப்பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது கிடைக்கும் ஆக்கப் பிரதிகளின் பதிப்புரிமையானது “இலங்கை நீரிழிவு சம்மேளனம் அமைப்பை சேர்வதுடன் இவற்றை பயன்படுத்தி டிஜிட்டல் […]
உலகளாவிய உள சுகாதார தினமானது வருடந்தோறும் ஏதாவதொரு தொனிப் பொருளுடன் விழிப்புணர்வு நாளாகப் பிரகடனப்படுத்தப் படுகின்றது. உள சுகாதாரப் பிரச்சினையால் ஒருமனிதனது உரிமை மற்றும் அவன் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உளசுகாதாரப்பிரச்சினைகள் பற்றிய விழிப் புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்துவதும், உள சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவி செய்தலும் அவசியமானதாகும். அந்த வகையில் இந்த வருடத்துக்குரிய தொனிப்பொருளாக அமைவது யாதெனில் “உளவியல் ரீதியான முதலுதவியைச் செய்தல்” என்பதாகும். ஏதேனும் ஓர் உளநெருக்கீட்டால் […]
அண்மைக்காலமாக யாழ் நகரிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் துரித உணவுப் பாவனை வேகமாக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக அதீத உடற்பருமன், நீரிழிவு, கொலஸ்ரோல் மட்டம் அதிகரித்தல் போன்றன ஏற்படும் ஆபத்து அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனை அண்மைக் கால ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன. வாரத்திற்கு மூன்று முறை துரித உணவுவகைகளை உண்ணும் பழக்கம் கொண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்துமா என்ற நுரையீரல் கோளாறு, எக்ஸிமா எனப்படும் தோல் நோய் போன்றவை வருவதற்கான ஆபத்துக்கள் அதிகரிக்கின்றன என்று உலக அளவில் […]
ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளை நோக்கும்போது பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரேமாதிரியான பிரச்சினைகளே ஏற்படுகின்ற போதிலும் அவை பெண்களை வித்தியாசமான முறையில் பாதிக்கின்றன. சிலநோய்நிலமைகள் உதாரணமாக மூட்டுவாதம் அதிகரித்த உடற்பருமன் மற்றும் மனஅழுத்தம் போன்றன. பெண்களை அதிகளவில் பாதிக்கின்றபோதிலும் சில நோய்நிலமைகள் பெண்களுக்கேதனித்துவமானவை. பெண்கள் எப்பொழுதும் தங்களைச் சார்ந்தவர்களுடையநலனில் செலுத்தும் கவனத்தை சிறிதளவேனும் தமக்காகவும் செலுத்த வேண்டும். பெண்களுடைய நலன்பற்றிக்கருதும்போது அவர்களுடைய உடல்நலம் பற்றி மட்டும் சிந்திக்காது உள. மனநல ஆரோக்கியம் பற்றியும் சிந்தித்தல் அவசியமானதாகும். பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் […]
செ.தயாபரி யாழ்.போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்