You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for August, 2016
நீரிழிவுநோய் அற்றவர்களை விட நீரிழிவு உள்ளவர்களுக்கு இருதயநோய்கள். மாரடைப்பு, பாரிசவாதம் போன்ற பல நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதற்கு பலகாரணங்கள் கூறப்படுகின்றன உதாரணமாக, நீரிழிவுடன் உயர்குருதி அமுக்கம், அதிக உடற்பருமன், புகைத்தல் பழக்கம், சிறுநீரக செயல்இழப்பு. தன்னாட்சி நரம்புத்தொகுதிபாதிப்புக்கள். நீரிழிவுடன் குருதிக்குழாய்களில் LDL கொலஸ்ரோல்படிதல், LDL கொலஸ்ரோலில் கிளைகேசன் செயற்பாடுகள், முச்சேர்மான கொழுப்பு Triglyceride இன் அதிகரித்த நிலை நீரிழிவுடன் குருதிச் சிதட்டுகளின் குவிதல் அதிகரிப்பும், பெருநாடியில் சுருக்கம், நீரிழிவுடன் குறைந்த HDL அளவு இரண்டாவது […]
“Frustration is the root of aggression” (விரக்தி வன்முறையின் ஆணிவேராகும்) இது ஒரு உளவியல் ஆய்வு முடிவாகும். வன்முறையென்பது தனக்கெதிராக (Attempted suicide or Self iteming) அல்லது பிறருக்கெதிராக அல்லது இரண்டுமாகக் காணப்படலாம். எமது தமிழ்ச்சமூகத்தில் அண்மைக்காலங்களில் வன்முறையானது மிகவும் அதிகரிப்படைந்து காணப்படுகின்றன. வன்முறைகள் ஒரு நச்சு வட்டமாக (vicious cycle) தொழிற்படுகின்றது. அதாவது வன்முறையால் விரக்தி நிலை கூடும். இதனால் மீண்டும் வன்முறை கூடும். எனவே அந் நச்சு வட்டமானது பல்வேறு படிகளில் […]
பல வயது முதிர்ந்த பெண்களின் வாழ்க்கையையும் அவர்களின்வா ழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும். ஒரு வெளியில் சொல்லமுடியாத அல்லது வெளியில்சொல்லவிரும்பாத ஒருபிரச்சினையாக கர்ப்பப்பை இறக்கம் உள்ளது. பொதுவாக பல குழந்தைகளை பிரசவித்த தாய்மாருக்கு இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்தில் ஆயுதம் பாவித்து பிரசவம் ஏற்பட்டிருப்பினும் ஏற்படலாம். மேலும் பெண்களின் வயது கூடும் போதும் இவ் வகை குடல் இறக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். கருப்பை இறக்கம் தனியாகவும் வரலாம். பல வேளைகளில் சிறுநீர்ப்பை மற்றும்பெருங்குடல் ஆகியனவும் சேர்ந்து கர்ப்பப்பையுடன் […]
இயற்கையை இறைவனாகச் சித்தரித்து வழிபடும் மரபு அன்றுதொட்டு இருந்துவருகின்றது. அந்த இயற்கை என்ற இறைவன் வைத்தியத்திலே விற்பன்னனாக இருப்பதால் அந்த இறைவனுக்கு வைத்தீஸ்வரன் என்றும் ஒரு பெயா் இருக்கிறது. நோய்த்தடுப்புக்கும் நோய் குணமாக்கலுக்கும் அடி நாதமாய் விளங்கும் இயற்கை மூலமாகக் கிடைக்கும் வளங்களை அசட்டைசெய்து செயற்கையான பொருட்களின் கால்களிலே நாம் முற்றாக சரணாகதி அடைந்துகொண்டிருக்கிறோம். அதனால் நோய்வாய்ப்பட்டுக்கொண்டிருக்கிறோம். வாழ்க்கை செயற்கைத்தனமாகி, இயந்திரமாகி, உணவுவகைகள் கூட பக்கற்றுகளிலும் பேணிகளிலும் வருகின்ற இரசாயன உணவுகளாக மாறி, பானங்கள் எல்லாம் போத்தலில் […]
வாகனத்தின் வேகத்தை அதிகரித்து சில நிமிடங்களை சேமிக்க நினைக்கும் நீங்கள் பல நாட்கள் படுக்கையில் இருக்க நேரிடும் விபத்துக்களைப் பற்றி நினைப்பதிலையோ? எவ்வளவு மெதுவாக வாகனத்தை செலுத்துகின்றீர்களோ அவ்வளவு விபத்துக்களையோ அல்லது விபத்தின் தீவிரத்தன்மையையோ குறைத்துக் கொள்ளலாம். சிந்தியுங்கள்!!, செயற்படுங்கள் !!
இன்றைய மனித சமூகமோ கோபத்தினால் குடும்பத்தையும் குலைத்து சமூகத்தையும் சீர்குலைத்து எங்கும் வன்முறையும், அடாவடியுமாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மனிதன் என்பவன் பலவகை உணர்வுகளால் அளப்படுகிறான். அவன் ஆசை, கோபம், மகிழ்ச்சி, பயம், காமம், கவலை, ஏக்கம், இரக்கம் போன்றவற்றால் இயக்கப்படுகின்றான். இவற்றுள் எது கூடினும் எது குறையினும் அது நோய் நிலையாகத்தான் கருதப்படும். ஆகவே மனிதன் எல்லாவற்றுக்கும் அளவோடு இருப்பானாயின் அவன் இந்த பூமியில் குழப்பமில்லாமல் வாழலாம். இதை வள்ளுவர் கூட அழகாகச் சொல்லியிருக்கிறார். “எது மிகினும் […]
நீரிழிவு வகை (II) நோயானது சில பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப மருந்து வகைகளை பரிந்துரை செய்வது மருத்துவர்களின் பொறுப்பாகும். எனினும் நோயாளிகளுக்கும் இந்த மருந்துகளின் அறிவு இருப்பது நோயை தொடர்ச்சியாக கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். நீரிழிவு நோய்க்கு பலவகையான மருந்துகள் இன்று பயன்படுத்தப்படுகின்றன. கிளிகிலசயிட் மருந்து எமது உடலில் சதையில் உள்ள இன்சுலின் சுரக்கும் கலங்களைத் துண்டி இன்சுலின் சுரக்கும் தன்மையை அதிகரிக்கவல்லதாகும். இந்த மருந்து வகையானது நீரிழிவைக்கட்டுப்படுத்தும் மருந்து சல்பனையில் யூரியா வகுப்பைச் சார்ந்ததாகும். […]