You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for July, 2016

வாயை சுகாதாரமாக வைத்திருக்க பற்களை நன்றாக பராமரிக்க வேண்டும். காலை எழுந்தவுடனும் இரவு நித்திரைக்கு செல்ல முன்பும் நாளுக்கு இருமுறை பல்துலக்க வேண்டும். ஒவ்வொருமுறை உணவு உண்ட பின்பும், நன்றாக அலசி வாயைக் கொப்பளிக்க வேண்டும். அச்சமயம் வெறும் தூரிகை கொண்டு சுத்தம் செய்வது நன்று. பற்தூரிகை வாங்கும்போது சிறிய தலையுடைய மிருதுவான வகையாக வாங்குவது நன்று. அப்போதுதான் பற்களின் வெளி மற்றும் உட்புறத்தை இலகுவாக சுத்தம்செய்ய முடியும். நான்கு மாதத்துக்கொருமுறை அதை மாற்ற வேண்டும். ஒரு […]

எலும்பு தேய்வடையும் நோய் (Osteoporosis) சம்பந்தமாக சிறிது விளக்கமாகக் கூறுங் கள்? இது எமது உடலிலுள்ள எலும்பு களின் உள்ளகக் கட்டமைப்பில் (Structural integrity) ஏற்ப்படும் பிரச்சினைகளால் என்பிழையத்தின் அளவு குறைவடைந்து ஏற்படுகின்ற ஒரு நோயாகும். இந்த நோயுள்ள வர்களுக்கு எலும்புஉடைந்துபோகும் தன்மை (Fracture) ஏற்படுவதற் கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாகும். இவ்வாறான நோயாளருக்கு. எலும்பில் உடைவு வெடிப்பானது இடுப்பெலும்பு முள்ளந்தண்டெலும்பு அல்லது மணிக்கட்டு எலும்பு போன்றவற்றிலே பிரதானமாக ஏற்படுகின்றது. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? சாதாரணமாக மாதவிடாய் […]

தூக்கமின்மை தொடர்பாக மனிதர்களிடம் காணப்படும் ஒட்டுமொத்த அலட்சியப்போக்கு மிகப்பெரிய அளவில் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக சர்வதேச மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக எச்சரித்திருக்கிறார்கள். ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ், ஹாவர்ட், மேன்செஸ்டர் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூட்டாக இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள். மனித உடலின் இயற்கையான செயற்பாடான தூக்கம் மற்றும் விழிப்புத்தன்மையை கட்டுப்படுத்தும் மனித உடலியக்க செயற்பாட்டு கண்காணிப்புத்தன்மையை ஆங்கிலத்தில் Body Clock, அதாவது உடல் கடிகாரம் என்கிற பெயரில் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத, […]

ஒரு மிதமான பொழுதுபோக்கிற்காக, நண்பர்களுடன் கலந்துரையாடும்போது பிடிப்பதாக இருந்த இந்த வெண்சுருட்டுகள் இன்று அனைத்து தரப்பிலும், பழக்கமாகிப் போய், அதை விட்டொழிக்க முடியாமல் தள்ளாத வயதிலும் தடுமாற்றத்தோடு அதை தவறாமல் புகைத்து வருகிறார்கள். புகைப்பவருக்கு புகை பல்வேறு நோய்களை தருவது மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இலவசமாக நோய்களைத் தந்து விடுகிறது என்பதுதான் புகைப்பவர்கள் தன்னையும் அறியாமல் செய்யும் கொடும் செயல்! அப்படி என்னதான் புகையால் தீமைகள் ஏற்படுகின்றன? என்றால், முதலில் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் […]

வாழ்வை இலகுவாக்க அறிமுகமாகிய பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனையானது இன்று மனிதவாழ்வின் இருப்பையேகேள் வியாக்கி நகரின் அழகையும் சுற்றுச் சூழல் சுகாதாரத் தையும் பாதிக்கும் பொருளாக மாறியுள்ளது. இலகுவில் உக்கும் தன்மையற்ற அதன் இயல்பு காரணமாக படிப் படியாக சூழலில் சேர்ந்து சூழலின் இயல்பைக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது இதன் நேரடி மற்றும் மறைமுகத்தாக்கங்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாயநிலை இன்றுமனிதகுலத்திற்கு எழுந்துள்ளது. குளப்படுக்கைகளிலும் வெள்ளநீர் ஓடும் வடிகால்களிலும் சேரும் இப்பிளாஸ்ரிக் பொருள்கள் மண்ணினுள் ஒரு படையாக உருப்பெறுவதால் வெள்ளநீர் புவியீர்ப் […]

தகரத்தில்,பக்கற்றுக்களில் அடைத்த உணவுப்பொருட்களைவிட இயற்கையாகக் கிடைக்கக்கூடிய உணவுப்பொருட்களே நம் உடலுக்கு சிறந்தவையம் ஆரோக்கியமானதாகவும் உள்ளது.

அண்மைக்காலமாக A9 வீதியிலும் யாழ்குடா நாட்டிலும் வாகன விபத்துக்களால் ஏற்படும் பாதிப்புக்கள் பெருமளவு அதிரித்துக் காணப்படுகின்றது. இது பல இறப்புக்களுக்கும், நிரந்தர உடற்பாதிப்புக்களுக்கும் காரணமாக அமைகின்றது. தினந்தோறும் வாகன விபத்துக்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் காரணமாக வைத்தியசாலைகளில் விடுதிகளிலும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் பெரும் இட நெருக்கடி காணப்பட்டு வருகின்றது. இலகுவில் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய இவ் வாகன விபத்துக்கள் காரணமாக பல குடும்பங்கள் நிர்க்கதி நிலைக்கு ஆளாகி வருவதுடன், பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும் உள்ளாகின்றனர். வாகன […]

ஒரு பாடசாலையானது அறிவானதும் ஆரோக்கியமானதுமான மாணவ இலக்கை அடையவேண்டுமானால் ஆரோக்கியமான பாடசாலை உணவகத்தை ஆரம்பித்தல் வேண்டும். இதன் மூலமே மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தையும் பாடசாலை இலக்கையும் அடைய முடியும். இவ்வாறான ஆரோக்கிய மான பாடசாலை உணவகத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பல. போஷாக்கான சுத்தமான உணவு கிடைக்க வழியேற்பட ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துதல், ஆரோக்கியமான போஷாக்கு நிலையிலுள்ளமாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தொற்றா நோய்களின்தாக்கத்தைக்குறைத்தல், ஆரோக் கியமான உணவுப்பழக்கங்கள் தொடர் பான […]

தாய்ப்பாலின் உன்னதத் தன்மையைப் பற்றியும், அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றியும் பெரும்பாலானோர் அறிவர். எனினும் வெற்றிகரமாக தாய்ப்பாலூட்டலைச் செய்வதில் அநேக தாய்மார் சிரமப்படுகின்றனர். இதனால் தான் தாய்ப்பாலூட்டல் சம்பந்தமான ஆலோசனைகளும் அறிவூட்டல்களும் சுகாதார சேவையாளர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. எமது சுகாதார அமைச்சும் தாய்ப்பாலூட்டலை ஊக்குவிப்பதற்கு பல வழிகளிலும் முயற்சிகள் எடுத்து வருகின்றது. அதன் ஒர் அங்கமாக 2013ம் ஆண்டு ஆவணி மாதத்தின் முதல் வாரத்தை ( 1 – 7ம் திகதி) தேசிய தாய்ப்பாலூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தி […]