You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for June, 2016

மனித வாழ்வில் நல்ல சம்பவங்களும் தீய சம்பவங்களும் மாறிமாறி நடந்த வண்ணம் இருக்கின்றன. நடந்த முடிந்த தீயவற்றை மட்டும் மீண்டும் மீண்டும் சிந்தித்து மனம் நொந்து கொண்டு இருப்போமாயின் நாம் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பம் அதிகமாகும். நாம் அன்றாடம் நல்ல விடயங்களை சிந்திக்க கூடியளவு நேரத்தையும் பிரச்சனையான விடயங்களைச் சிந்திக்க குறைந்தளவு நேரத்தையும் ஒதுக்கி கொள்ள வேண்டும். மனித மூளையும் இதற்கு ஏற்ற வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகள் மனிதனின் நல்ல நினைவுகள் விரைவில் மங்குவதில்லை […]

உயிர் வாழ்வதற்கு உணவு உடை, உறையுள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது குருதி. ஒரு உயிர் கலங்கள், இழையங்களால் ஆன ஒரு அமைப்பு இவை ஒவ்வொன்றிற்கும் தேவையான ஓட்சிசன், விற்றமின்கள், கணியுப்புகள், மற்றும் போசணை கூறுகளை அணைத்தையும் எடுத்துச் செல்வதில் அல்லது கடத்துவதில் கருவியாக அமைவது இந்த குருதியாகும். குருதியானது திரவவிழையம் கலங்களைக் கொண்ட ஒரு பாயமாகும் திரவவிழையமானது போசணைப் பதார்த்தங்களை உள்ளடக்கியது. இவற்றின் மூலம் தான் மனித உடலில் அமைந்திருக்கும் உடல் இழையங்களுக்கு தேவையான விற்றமின்கள், […]

உயரவளர்ச்சி குன்றிய பிள்ளைகள் அவ்வாறு இருப்பதற்கான காரணங்கள் யாவை? பிள்ளையொருவரின் உயரம் குறைவாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக நீண்டகாலமாகப் போதுமானளவு சத்தான உணவுகளை உள்ளெடுக்காதவிடத்து (Chronic Malnutrition) உயரம் மற்றும் உடல் நிறை என்பன சீரற்ற விதத்தில் அதிகரிக்காது விடுகின்றன. இதேபோல் எந்தவோரு நீண்டகால நோய் ( உதாரணம் சிறுநீரக பிரச்சினைகள், சமிபாட்டுத் தொகுதி நோய்கள், இருதய நோய்கள்) இருக்கும்போது சிறுவர்களின் உயரவளர்ச்சி பாதிப்படைய நேரிடுகின்றது. பெற்றோர் உயரம் குன்றி இருக்கும்போது பிள்ளைகளின் உயரமும் […]

உலகெங்கும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இதனைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதமே. தற்போது அறிமுகமாகி இருக்கும் ஒரு புதிய எளிய இரத்தப்பரிசோதனை மூலம் மார்பகப்புற்று நோய் ஏற்படும் ஆபத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியும் வாய்ப்பு ஏற்ப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் பல வேண்டத்தகாத விளைவுகளை எதிர்காலத்தில் தவிர்த்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். கேன்சர் ரிசர்ச் என்கிற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த […]

ஒரு பெண் கர்ப்பமடையும் போது உடல், உளரீதியாக பூரணசுகத்துடன் இருக்க வேண்டும். திருமணமான பின்பு குழந்தைக்கு எதிர்பார்த்து இருக்கும் போதே போலிக்கமிலம் எடுக்க வேண்டும். பூரண நிறையுணவு உள்ளெடுக்க வேண்டும். ரூபெல்ல ஊசி போடாத பெண்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற்று ரூபெல்ல எடுத்த பின்னரே கர்ப்பமடைதல் வேண்டும். கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தமது பிரதேச குடும்பநலக்களினிக்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக வைத்தியசாலையில் முதற்கிளினிக் பதிவுசெய்யப்படும். கர்ப்பகால 12 கிழமைகளில் வேண்டும். பின்னர் சலப்பரிசோதனை, இரத்தப்பரிசோதனைகள், […]

1. பச்சையாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்ககூடிய காய்கறி 2. உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக இருக்கக்கூடியது. 3. இதில் 90 வீதம் நீர் காணப்படுவதால் நீங்கள் தண்ணீர் குடிப்பது குறைவாயினும் அதனை ஈடுசெய்யக்கூடியது. 4. உடல்சூட்டுக்கு நிவாரணம் கிடைக்கும். 5. சருமத்தில் இதனை தடவினால் சூரிய கதிர்களிலிருந்து உங்களை பாதுகாக்கும். 6. வெள்ளரிக்காயில் இருக்கும் நீர் உடலிலுள்ள கழிவை நீக்க உதவுவதுடன் இதனை சீராக சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை குறைக்கும். 7. வெள்ளரிக்காயில் உடலுக்கு தேவையான […]

கரப்பான் பூச்சியைத் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். ஆனால் இந்த கரப்பான் பூச்சியானது மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்றாதா என்பது சிலருக்கே தெரிகின்றது. கரப்பான் பூச்சியானது தனது மலக்கழிவு உமிழ் நீரினூடாக உணவு, நீர் என்பவற்றினை மாசடையச் செய்கின்றது. இக்கழிவுகளால் வயிற்றோட்டம், உணவினை பழுதடையைச் செய்கின்ற பக்றீரியாக்கள் செறிந்து காணப்படுகின்றன. கரப்பான் பூச்சியின் மலக்கழிவு, உடற்பாகம் காற்றிலே பரம்பலடைகின்றது. இக்காற்றினை சுவாசிப்பதினால் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஏற்படுகின்றது. இதனால் சிறுவர்கள் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றார்கள். உணவு, நீர், என்பவற்றை தகுந்த சுகாதார […]

1. உடலின் எடையை சீராக வைத்துக்கொள்ளுங்கள். 2. உங்கள் இரத்த அழுத்தத்ததை எப்போதும் சீரான நிலையில் வைத்துக்கொள்ளுங்கள். 3. அன்றாட உணவில் வண்ண வண்ண காய்கறிகளையும், கனிவகைகளையும் பசுமை மாறாத கீரை வகைகளையும் போதுமான அளவில் எடுங்கள். 4. கொழுப்பு வகை உணவு வகைகள குறைவான அளவில் உட்கொள்ளுங்கள். 5. அன்றாடம் 8 மணி நேரம் உறங்குங்கள். 6. அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். 7. இரத்தத்தில் வெல்லத்தின் அளவை நலமான அளவில் வைத்துக் கொள்ளுங்கள். 8. இரத்தத்தில் […]

குடிதண்ணிர்த் தேவைக்காக பொதுக்கிணறுகளில் இருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் செயன்முறை தொன்று தொட்டுநடைபெற்றுவரும் ஒன்றாகும். நிலத்தடி நீர் சவர்த் தன்மையுடைய பகுதிகளில் வாழுகின்ற மக்கள் இன் றும், தமது குடிதண்ணிர்த் தேவைக்காக பொதுக் கிணறுகளில், கோயில் கிணறுகளில் தங்கி இருக்கும் நிலை காணப்படுகின்றது. இங்கிருந்து பெறப்படும் நீர் சுத்தமான குடிதண்ணி என அவர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்தக் கிணற்றில் இருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும்போது, அவர்களின் தவறான செயன்முறைகளினால் அந்தக் கிணற்று நீர் மாசடைந்து கிருமித் தொற்றுக்குள்ளாவதை அவர்கள் உணர்வதில்லை. […]

( தேசிய புகையிலை எதிர்ப்புத்தினத்தையோட்டி (2014) நடைபெற்ற கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை) நெருப்பில்லாது புகையாதென்பது பழமொழி புகையில்லாது வாழ்வேதென்பது சிலர் வழி கருவறை தொடங்கி கல்லறை வரையுமே வாழ்க்கை வழி சிகரேட் புகையுண்டு சீக்கிரம் செல்வதே சிலரின் வழி உறவுக்குப் பகை இங்கு கடனென்பார்கள் இது உலக வழக்கு உயிருக்கு பகையிந்தப் புகையென்கிறார்கள் இது நோய் நிலை கணக்கு உயிர் நீத்த உடலத்தை சிதையேற்றி தீ முட்டல் மரபு உயிர் உள்ள உடலுள்ளே […]